சீசன் எதிரொலியால் ராமநாதபுரத்திற்கு மாம்பழம் வரத்து;  கிலோ ரூ.120

ராமநாதபுரம்: மா சீசனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம், மதுரை பகுதிகளிலிருந்து மாங்காய்கள், மாம்பழங்கள் வந்துள்ளன. அதிகபட்சம் கிலோ ரூ.120 வரை விற்கப்படுகிறது.

மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே மா சாகுபடி நடக்கிறது. இதனால் ஒவ்வொரு சீசன் காலத்திலும் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விற்கின்றனர். தற்போது மா சீசன் துவங்கியுள்ளதால் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலிருந்து மாங்காய்கள் ராமநாதபுரம் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

அதிகபட்சம் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரையும், கல்லாமணி, காசாலட்டு மாம்பழங்கள் ரூ.100 முதல் ரூ.120 வரை தரத்திற்கு ஏற்ப விற்கப் படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். மா சீசன் தற்போது தான் துவங்கியுள்ளதால் விலை அதிகமாக உள்ளது. இனிவரும் வாரங்களில் வரத்து அதிகரிக்கும் என்பதால் மாம்பழத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் கூறினர்.

Advertisement