அரசு பள்ளி மாணவர்கள் 127 பேருக்கு'நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு
நாமக்கல்:நாடு முழுவதும் இளநிலை மருத்துவர் படிப்புகளான (எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்.,) போன்ற படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வு, ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்பட்டு வருகிறது. 'இந்தாண்டு தேர்வு வரும், மே, 3ல் நடக்கும்' என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில், 4,471 மாணவ, மாணவியர், 'நீட்' தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்காக, மாவட்டம் முழுவதும், 11 மையங்கள் ஏற்படுத்தப்படுகிறது. தமிழக அரசு சார்பில், அரசு பள்ளிகளில் படித்து, வெற்றிபெறும் மாணவ, மாணவியருக்கு, மருத்துவ படிப்பில் சேர, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' தேர்வில் வெற்றிபெற, தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு இலவச பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டு அரசு பள்ளிகளில் பிளஸ் -2 படித்த, 127 மாணவ, மாணவியருக்கு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என, இரண்டு மையங்களில், மாவட்ட கல்வித்துறை சார்பில், 'நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும்
-
ராஜஸ்தானில் பயங்கரம்; ஓடும் காரில் பற்றிய தீயில் 5 பேர் உடல் கருகி பலி
-
பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை; ஆறுகளாக மாறிய சாலைகள்; 24 மணி நேரத்தில் 8 பேர் பலி
-
தமிழக அரசு டிஸ்மிஸ்; ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை; சுப்ரீம் கோர்ட் கருத்தால் அதிர்ச்சி அலை!
-
கப்பல் அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி; டி.ஆர்.டி.ஓ., சாதனை
-
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை திருப்பி கொடுத்தது அமெரிக்கா
-
அதிகரிக்கும் வெப்ப அலை... மதிய வேலையில் பணியை நிறுத்தியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்