தமிழக அரசு டிஸ்மிஸ்; ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை; சுப்ரீம் கோர்ட் கருத்தால் அதிர்ச்சி அலை!
சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காக பந்த் அறிவித்தது அப்போதைய கருணாநிதி அரசு. இத்தனைக்கும் மத்தியில் இருந்தது காங்கிரஸ் ஆட்சி. அதில் திமுக அமைச்சர்களும் இருந்தனர். மத்திய அரசுதானே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்? செயல்படுத்தாவிட்டால் ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம் என திமுக காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம்.
பந்த் அறிவிப்பு
ஆனால் அதைச் செய்யாமல், 'அக்டோபர் 1, 2007ல் தமிழகம் முழுக்க பஸ் ஓடாது. கடைகள் மூடப்படும்' என அரசே பந்த் அறிவித்தது. சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த ராமர் பாலத்தை உடைக்க வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றம் இதற்கு தடை விதித்துவிட்டது. இதனால் உச்ச நீதிமன்றத்தை நேரடியாக விமர்சிக்க முடியாது என்பதால் இப்படி ஒரு பந்த் அறிவித்தார் முதல்வர் கருணாநிதி.
உடனே அதிமுக, 'அரசே பந்த் நடத்துவது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
'இது வெறும் ஹர்த்தால்தான். இந்த எதிர்ப்புப் போராட்டமானது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காது. தானாக முன்வந்து கடைகளை அடைப்பவர்களையும், வேலைநிறுத்தம் செய்பவர்களையும் அரசு கட்டாயப்படுத்தவில்லை' என தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்தது.
இதையடுத்து தமிழக அரசு ஆதரவு அறிவித்த பந்த் போராட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதை எதிர்த்து அதிமுக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
ஹர்த்தாலுக்கும் பந்த்திற்கும் என்ன வித்தியாசம்?
ஹர்த்தால் அல்லது அமைதியான முறையில் நடக்கும் வேலைநிறுத்தங்கள் சட்டப்பூர்வமானவை. அதாவது மக்கள் தானாக முன்வந்து பங்கேற்கும் நிகழ்வாக இருக்க வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. அத்துடன், அத்தியாவச சேவைகளான போக்குவரத்து, பால் விநியோகம், மருத்துவ சேவைகள் எக்காரணத்தைக் கொண்டும் பாதிக்கக்கூடாது. இதுதான் ஹர்த்தாலுக்கு அர்த்தம். 'பந்த்' என்பது பெரும்பாலும் கட்டாயப்படுத்துதல் மற்றும் வன்முறை மூலம் மக்களைப் பணிய வைப்பதாக இருப்பதால், அது ஜனநாயக ரீதியான போராட்டமாக ஏற்கப்படாது.
அரசியல் கட்சிகளோ அல்லது அமைப்புகளோ பந்த் அறிவிப்பதும், அதை அமல்படுத்துவதும் சட்டவிரோதமானது. இதனால் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றன.இப்படி ஹர்த்தாலுக்கும் பந்த்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவுபடுத்தி பந்த் நடத்துவது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் 1997ல் தீர்ப்பளித்தது. இருப்பினும் இந்த விவகாரத்தில் இன்னமும் விவாதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஞாயிறு விசாரணை
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எதுவும் நடைபெறாது. ஏதாவது தலை போகிற விஷயமாக இருந்தால் மட்டுமே அவசர மனுவாக இந்த நாட்களில் விசாரிக்கப்படும்.
அதிமுகவின் மனு அவசர மனு... திங்கட்கிழமைதான் பந்த், அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்பாக பந்த் ஆரம்பித்துவிடும். எனவே உடனடியாக விசாரிக்க வேண்டும் என அதிமுக வக்கீல்கள் முறையிட்டனர். இதையடுத்து செப்டம்பர் 30, 2007 ஞாயிறு அன்று விசாரணைக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
சேது சமுத்திர திட்டத்துக்காக, ராமர் பாலத்தை உடைக்க தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி பி.என்.அகர்வால் மற்றும் பி.பி.நௌலேக்கர் அமர்வே இந்த வழக்கை விசாரித்தது. சுமார் 3 மணி நேரம் வாதங்கள் நடைபெற்றன.
'திமுக அரசின் பந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. அத்துடன் ஒரு மாநில அரசே பந்த் அறிவித்துள்ளது. அன்றைய தினம் போக்குவரத்து உட்பட அனைத்து அத்தியாவசிய சேவைகளும் முடக்கப்படும்' என அதிமுக வாதிட்டது.
'இது பந்த் கிடையாது, ஹர்த்தால். அதாவது யாரையும் கட்டாயப்படுத்தவில்லை, மக்கள் தானாக முன்வந்து நடத்தும் ஹர்த்தால்' என வாதிட்டது திமுக.
கண்டனம்
உடனே நீதிபதிகள் திமுக வக்கீலிடம், 'உங்களுடைய தீர்மானத்தைப் படியுங்கள்... அதில் என்ன சொல்லியிருக்கிறது' என்று கேட்டனர். 'நாங்களே படிக்கிறோம்' என சொன்ன திமுக வக்கீல், 'சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதற்காக பந்த் நடத்துகிறோம்' என்கிற திமுகவின் தீர்மானத்தைப் படித்தார்.
“அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். எந்த வேலையும் நடக்கக்கூடாது என உங்கள் தீர்மானம் சொல்கிறது. அப்படியானால் இது கட்டாயப்படுத்தும் வேலைதானே” என நீதிபதிகள் கேள்வி கேட்க, திமுக வக்கீல் அமைதியாக இருந்தார். “உங்களுடைய போராட்டம் யாருக்கு எதிராக நடத்தப்படுகிறது? மத்திய அரசுக்கு எதிராகவா அல்லது இந்த நீதிமன்றத்திற்கு எதிராகவா,” என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார் நீதிபதி.
கூடவே, சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். “இந்த வழக்கை சரியான முறையில் சென்னை உயர்நீதிமன்றம் கையாளவில்லை. உச்ச நீதிமன்றத்தில் 1997 தீர்ப்பின் படி இந்த பந்த்தை உயர்நீதிமன்றம் தடை செய்திருக்க வேண்டும்,” என்று நீதிபதி அகர்வால் கோபத்துடன் சொன்னார்.
“திமுகவின் தீர்மானத்தை உயர்நீதிமன்றம்தான் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துள்ளது. அதில் இது பந்த் என உயர்நீதிமன்றமே குறிப்பிட்டுள்ளது. ஆனாலும் தடை செய்யவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல் எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்தகைய சர்ச்சைக்குரிய முடிவுகளால், சென்னை உயர் நீதிமன்றம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாவதோடு, மறைமுகமான விமர்சனங்களுக்கும் ஆளாகிறது” என நீதிபதி அகர்வால் சொல்லச் சொல்ல, கோர்ட்டில் அமைதி நிலவியது.
இத்தோடு நீதிபதி நிற்கவில்லை. ''ஒரு வேளை பந்த்தை தமிழக அரசு நடத்தினால் இது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என அர்த்தம். இதனால் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்துவோம்,” என்றும் கூறினார்.
நீதிபதி இவ்வாறு கூறியதும், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பிறகு ஆர்டரை டிக்டேட் செய்தார் . ''எக்காரணத்தைக் கொண்டும் இந்த பந்த் நடைபெறக்கூடாது” என்பதுதான் இந்த உத்தரவின் சாராம்சம்.
தமிழகத்தில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா?
உச்ச நீதிமன்றம் இவ்வளவு கறாராக உத்தரவிட்ட பிறகும் தமிழகத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடவில்லை. சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
உடனே காலையில் அதிமுக வக்கீல்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அகர்வால் அமரும் கோர்ட் எண் 2ல் இந்த விவகாரத்தை முறையிட்டனர். “நீங்கள் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்தில் பந்த் நடைபெறுகிறது” என வக்கீல் சொன்னார். நீதிபதி அகர்வாலும் நௌலேக்கரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
நீதிபதி அகர்வால் முகத்தில் கோபம் கொப்பளித்தது. “அரசாங்கமே பந்தை முன்னின்று நடத்தினால், சட்டத்தின் ஆட்சி எங்கே இருக்கிறது? இது என்ன அரசாங்கமா? தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறதா அல்லது சர்வாதிகாரம் நடக்கிறதா? மனுதாரரின் வக்கீல் சொல்வது உண்மையானால் தமிழகத்தில் அரசியலமைப்பு செயலிழந்துவிட்டது என அறிவித்து ஜனாதிபதிஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்க வேண்டியிருக்கும்” என்று கருத்து தெரிவித்தார் நீதிபதி.
உடனே நாங்கள் வெளியே ஓடினோம். மொபைல் போன்களில் டிவி சேனல்களின் அலுவலகங்களுக்கு போன்களும் மெசேஜ்களும் பறந்தன. அடுத்த 2 நிமிடங்களில் டிவிக்களில் பிரேக்கிங் நியூஸ் பரபரத்தது. ''தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்யும்,'' என்பது தான் அந்த பிரேக்கிங் நியூஸ். இது குறித்து மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அன்றைய தினம் சென்னையில் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கின. தார்மீக ரீதியாக மக்களே முன்வந்து இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர் என கருணாநிதி பிற்பாடு சொன்னார்.
சில நாட்களுக்குப் பிறகு முதல்வர் கருணாநிதி, டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, தலைமை செயலர் உட்பட சில அதிகாரிகளுக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் கோர்ட் அனுப்பியது. ஆனால் ஒன்றரை ஆண்டு கழித்து இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது உச்சநீதிமன்றம்.
- அ.வைத்தியநாதன்
அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.
தொடர்புக்கு: mailto:vaithi@dinamalar.in
திமுக ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்று தேர்தல் முடிவு வந்தால், உடனடியாக தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று மக்களின் விருப்பம். காரணம் இவர்கள் ஆட்சியில் போன 5 ஆண்டுகளில் நடந்த எல்லா குற்ற நடவடிக்கைகளும் திமுக முதலில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளிக்க வேண்டும். இது நடக்காது என்று எங்கும் தெரியும். கருத்து சொல்லுவது எங்கள் கடமை. சும்மா சொல்லிக் கொள்வோம். எங்களின் ஆசையை திமுக சொல்லுவதை போல்
திமுக டீவி சேனல்கள், பந்த் வெற்றி. பேருந்து ஓடவில்லை, கல்லூரிகள் இல்லை, கடைகள் இல்லை என்று காலை 8 மணிக்கு ஸ்க்ரால் ஓட்டினர். அடுத்த 2 மணி நேரத்தில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல இயங்குகிறது, கல்லூரிகள் செயல்படுகின்றன, கடைகள் உள்ளது. இயல்பு நிலை உள்ளது என்று ஸ்க்ரால் போட்டன. முக பதறியடித்து கொண்டு, தலைமை செயலகம் ஓடினார்
Final climax is Supreme court dismissed its own contempt of court notice . Let us blame Supreme court first
திமுக அரசியல் ஆதாயங்களுக்காக பல்டிக்கு மேல் பல்ட்டி அடித்த கட்சி என்பது முதன் முறையாக வாக்களிப்பவர்களுக்குத் தெரியாது ......
இவனுங்களுக்கு அரிப்பு
தமிழனுக்கு பிரதிநிதி திராவிடன் என்பதைப்போன்ற கேவலம் தமிழனுக்கு வேறு இருக்க முடியாது..
இப்படியே பழங்கதை பேசியே அடுத்த ஐந்தாண்டுகளும் ஓட்ட வேண்டியது தான்!
திராவிட கிரிமினல் மூளையால் இது போலத்தான் சிந்திக்க முடியும்.
ஒருக் கட்சிக்கு முழுமூச்சுடன் எதிர்ப்பு.அதேக் கட்சியுடன் கூட்டு .இங்கு திமுக மும்பையில் சிவசேனா என்றுப் பட்டியல் இடலாம்.கட்சித் தேயக் காரணம் நிலையில்லாத போலித்தனக் கொள்கை.
அதே சர்வாதிகார திமிரு மகன் பேரன் கொள்ளு பேரனும் இருக்கிறது.
அப்போதிருந்தே உச்சநீதிமன்றத்தில் திமுகவின் ஆதிக்கம் ஆரம்பித்துவிட்டது.மேலும்
-
சொல்கிறார்கள்
-
சொல்கிறார்கள்
-
தயார் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டுகள்நோய் பாதித்தால் தனி போர்டலில் பதிவேற்ற பயிற்சி
-
கோயில் திருவிழா
-
பால் குளிரூட்டும் இயந்திரங்களைபயன்இன்றி பூட்டி வைத்துள்ள ஆவின் பால் வீணாவதாக உற்பத்தியாளர்கள் புகார்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்