தேசிய பாதுகாப்பை மீண்டும் சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சி?
புதுடில்லி: அந்தமான் - நிக்கோபர் தீவில் மேற்கொள்ளப்படும் கிரேட்டர் நிக்கோபர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், ''நாட்டிலேயே இது மிகப்பெரிய ஊழல்,'' என குற்றஞ் சாட்டியுள்ளார்.
அந்தமான் - நிக்கோபர் தீவில் உள்ள நிக்கோபரில், 'கிரேட்டர் நிக்கோபர் திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது.
பாதுகாப்பு
மொத்தம் 81,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் வாயிலாக, சர்வதேச கொள்கலன் முனையம், பயணியர் மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கான பசுமை விமான நிலையம், மின் உற்பத்தி நிலையம் மற்றும் புதிய நகரமைப்பு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்க உள்ளது.
கடல்சார் வணிகம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு, தொடக்கம் முதலே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அந்தமான் - நிக்கோபர் தீவுகளுக்கு சென்றுள்ள அக்கட்சி எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், இது தொடர்பாக நேற்று கூறியதாவது:
பேரழிவு
என் வாழ்நாளிலேயே மிகவும் அரிய, வியக்கத்தக்க வகையிலான ஏராளமான மரங்களை அந்தமான் - நிக்கோபர் தீவில் பார்த்துள்ளேன். அவை அனைத்தும், நினைவுகளுக்கு அப்பாற்பட்ட பழமையான மரங்கள். தலைமுறை கடந்து வாழும் மரங்கள் அடங்கிய காடு இது.
இங்குள்ள மக்களும் அப்படித்தான். இங்கே வசிக்கும் பழங்குடியினர் ஆகட்டும் அல்லது இந்த பகுதியில் கு டியேறிவர்களாகட்டும்; அவர்களுக்கு சொந்தமான உரிமைகள், அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான மரங்கள் இங்கு கோடாரியின் வெட்டுக்கு குறிவைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 160 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ள இந்த மழைக்காடுகள் அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளன.
இது வளர்ச்சி அல்ல; வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேரழிவு. அந்தமான் - நிக்கோபர் தீவில் தற்போது நடந்து கொண்டிருப்பது, இயற்கை மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான நாட்டின் மிகப்பெரிய ஊழல்.
குற்றம்
மேம்பாடு என்ற பெயரில், இயற்கையால் வழங்கப்பட்ட சொர்க்கத்தை அழிக்க நினைப்பது மாபெரும் குற்றம். இது, உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அந்தமான் - நிக்கோபர் தீவில் உள்ள உண்மையை, நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கண்டால் மட்டுமே இந்த குற்றம் தடுத்து நிறுத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்க போய் போட்டோ எடுக்க போஸ் கொடுத்தாச்சு திரும்பி வா
ராகுலனும் காங்கிரஸ் கட்சியும் இத்திட்டத்தை எதிர்ப்பதற்கு முழுமுதற் காரணம் வேறென்ன இருக்க முடியும்?. அங்கு வாழும் பழங்குடியின மக்களையும் வழக்கம் போல விட்டு வைக்கவில்லை மத மாற்றிகள். மோடி அவர்கள் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முனைந்தால் சும்மா இருப்பார்களா. அப்பாவி மக்களின் வறுமையும் அறியாமையும் தானே மாற்றிகளின் மூலதனம் வளர்ச்சி அடைந்து விட்டால் அப்படிப்பட்டவர்களின் பாடு திண்டாட்டமாகிவிடாதா. போலியான செக்யூலரிஸ்ட்கள் வங்கி அரசியலுக்காக அவர்களுக்கு வக்காலத்து வாங்க வந்துவிடுகின்றனர். அவ்வப்போது அரங்கேற்றப்படும் இதுபோன்ற இயற்கை மீதான திடீர் பாச நாடகங்களை தற்போதைய சமுதாயம் வேறுபடுத்தி காண்பதற்கு நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர்
ராகுல் நீங்க சென்டினல் பழங்குடி மக்களின் ஆடைகளை அணிந்து கொண்டு சென்டினல் தீவில் தனியாக சென்று செட்டில் ஆகி விடுங்க
ராகுல் இங்கேயும் சென்று அரசியல் ஆரம்பித்துவிட்டாரா இவருக்கு இங்கே செய்யும் அரசியல் போதாதென்று அமைதியாக இருக்கும் அந்தமான் நிகோபார் தீவுக்கும் சென்றுவிட்டாரா இவர்க்கு அங்கே செல்ல தடை விதிக்க வேண்டும் அங்கே சென்று இவரது உருப்படாத அரசியலை அமல்படுத்த மத்திய அரசு உடனே நடவடிக்கைளை எடுக்க வேண்டும்
Is he working for our Motherland or any ulterior motives, as usual?
இதிலென்ன சந்தேகம்? சீனாவிற்கு ஆதரவாக தான் இந்த விஷயத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்.. கடந்த வாரம் சீன பத்திரிக்கை அந்தமான் திட்டத்தையும் மலாக்கா ஜலசந்தி பற்றியும் கட்டுரை எழுதி இருந்தான் உடனே ராகுலுக்கு கோவம் வந்துவிட்டது உடனே அதெப்பெடி இந்தியா வளர்ச்சி அடையலாம் என்று கிளம்பிவிட்டார்.. தேச விரோத செயல் என்றால் ராகுலுக்கு ரொம்ப பிடிக்கும்
சரி பெங்களூரு இப்போது மிக சூடான நகரம் நீங்கள் எல்லா மரத்தையும் வெட்டி விட்டீர்கள் ,கரணம் சாலை விரிவாக்கம் மற்றும் மெட்ரோ பணிகள் ,இதில் கூட மிக பெரிய ஊழல்னு சொல்றாங்க
ராகுல் ஓ சோட்டா பச்சா ஹே ...கீழே உள்ள தரவுகளை நன்றாக படிக்கவும் இது எல்லாம் காங்கிரஸ் ஆட்சில் நடந்தது பொய் இல்லை இது முற்றிலும் உண்மை ..
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி UPA ஆட்சிக் காலத்தில் 2004–2013, தொழிற்சாலைத் திட்டங்களுக்காகச் சுமார் 2.43 லட்சம் ஹெக்டேர் 2,430 சதுர கி.மீ வன நிலமும், சுரங்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக மேலும் 1.64 லட்சம் ஹெக்டேர் நிலமும் அழிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பல தசாப்தங்களாக மொத்த வனப்பரப்பு ஏற்ற இறக்கமான போக்கைக் கண்டாலும், மேம்பாட்டுத் திட்டங்களால் குறிப்பிடத்தக்க வன இழப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
காங்கிரஸ் தலைமையிலான காலகட்டங்களிலும் அதைச் சுற்றியுள்ள பத்தாண்டுகளிலும் ஏற்பட்ட காடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் தொடர்பான முக்கிய விவரங்கள்:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி 2004-2013: திட்டங்களுக்காக 2.43 லட்சம் ஹெக்டேர் நிலம் திருப்பிவிடப்பட்டதாகவும், மேலும் எண்ணெய்/கனிம ஆய்வுக்காகக் கூடுதல் நிலம் திருப்பிவிடப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நீண்ட காலப் போக்குகள்: இந்தியக் காடுகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சேதம் காலனித்துவ காலத்தில் நிகழ்ந்தது. இருப்பினும், சுதந்திரத்திற்குப் பின்னரும் சுரங்கம், உள்கட்டமைப்பு மற்றும் விவசாய விரிவாக்கத்திற்காக பெரிய அளவிலான தொழிற்சாலை அழிப்புகள் தொடர்ந்தன.
வட பிராந்தியத்தின் தாக்கம்: 2003 மற்றும் 2013-க்கு இடையில், வடகிழக்குப் பிராந்தியத்தின் சில பகுதிகளில் வனப்பரப்பு பொதுவாகக் குறைந்து வரும் போக்கைக் காட்டியுள்ளது. குறிப்பாக நாகாலாந்து, திரிபுரா மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் வனப்பரப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைகளும் சூழலியல் பாதிப்பும்: கடந்த பல பத்தாண்டுகளாக ஆரவல்லி மலைத்தொடரின் கணிசமான பகுதி தொழிற்சாலை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஒப்பீடு: பல்வேறு ஆய்வுகளின்படி, தொழிற்சாலை, சுரங்கம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகக் காடுகள் திசை திருப்பப்படுவது பல தசாப்தங்களாகத் தொடரும் ஒரு போக்காக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் 1980–2010, பெரும்பாலும் சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளுக்காக 14,000 சதுர கிலோமீட்டர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன
இதை யாராலும் மறுக்க முடியாது இதற்க்கு ராகுல் பர்த்தில் சொல்லமுடியுமா ..
வெய்யில் அதிகம் ஆகி விட்டது. விட்டு தள்ளுங்கள் ராகுல் அவர்கள் சொன்னதை
என்ன ராகுல் உனக்கு உம்மோட நாட்டில் இருந்து இன்ஸ்ட்ரக்ஷன் வந்துருச்சா? நீர் அங்க கால் வைக்கும் போதே நினைத்தேன்.ஏதோ உள்விஷயம் இருக்கு என்று , இப்போ நிரூபித்துவிட்டீர்மேலும்
-
கப்பல் அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி; டி.ஆர்.டி.ஓ., சாதனை
-
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை திருப்பி கொடுத்தது அமெரிக்கா
-
அதிகரிக்கும் வெப்ப அலை... மதிய வேலையில் பணியை நிறுத்தியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
-
ஹார்முஸ் ஜலசந்தி பெயரை மாற்றணும்; தனது பெயரை சூட்ட சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போருக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு; கணக்கு சொல்கிறது பென்டகன்
-
கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்; பிரிட்டன் மன்னரிடம் வலியுறுத்தும் மம்தானி