மண் திட்டுகளால் துார்ந்த குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
திருப்புலிவனம்: மண் திட்டுகளால் துார்ந்த திருப்புலிவன,ள அப்பா செட்டி குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் ஊராடசியில் உள்ள அப்பாசெட்டி குளம், அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இக்குளத்து நீரை கிராம மக்கள், குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகளின் தாகம் தீர்க்கும் தடாகமாகவும் இக்குளம் இருந்து வருகிறது.
முறையான மராமத்து பணி நடைபெறாததால், இக்குளம், மண் திட்டுகளால் துார்ந்துள்ளது. இதனால், பருவ மழையின்போது குறைந்த அளவே மழைநீரே இக்குளத்தில் சேகரமாகுகிறது. இதனால், கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே இக்குளம் வறண்டு விடுகிறது.
எனவே, அப்பாசெட்டி குளத்தை துார்வாரி சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருப்புலிவனம் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
சொல்கிறார்கள்
-
சொல்கிறார்கள்
-
தயார் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டுகள்நோய் பாதித்தால் தனி போர்டலில் பதிவேற்ற பயிற்சி
-
கோயில் திருவிழா
-
பால் குளிரூட்டும் இயந்திரங்களைபயன்இன்றி பூட்டி வைத்துள்ள ஆவின் பால் வீணாவதாக உற்பத்தியாளர்கள் புகார்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்