கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
பொன்னேரி: பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, அங்குரார்ப்பணம் மற்றும் கொடியேற்றம் நடந்தது.
பொன்னேரி, திருவாயற்பாடியில் அமைந்துள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் இரவு அங்குரார்ப்பணம் பூஜையுடன் துவங்கியது. இந்த பூஜை, பிரம்மோத்சவம் எந்தவொரு தடையும் இன்றி நடைபெறுவதற்காக நடத்தப்படுகிறது.
இதற்காக, கோவில் பட்டாச்சாரியர்கள் அருகில் உள்ள நந்தவனத்தில் இருந்து மண் எடுத்து வந்து, கோவில் மண்டபத்தில் பரப்பி, அதில் பூதேவியின் உருவத்தை வரைந்தனர். பின், பூதேவியின் வயிற்று பகுதியிலிருந்து மண் எடுத்து, அதை சிறிய மண் தொட்டிகளில் நிரப்பி, நெல், கேழ்வரகு, பச்சை பயிறு உள்ளிட்ட நவதானியங்களை பதித்து பூஜை செய்தனர்.
இதை தொடர்ந்து, உற்சவ பெருமான மாடவீதிகள் வழியாக வீதியுலா வந்தார். நேற்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
ஆர்.கே.பேட்டை ஆர்.கே.பேட்டை அடுத்த எஸ்.வி.ஜி.புரத்தில் ருக்மணி, சத்யபாமா சமேத சந்தான வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சித்திரை பிரம்மோத்சவம், நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு அம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்தார்.
இன்று சிம்ம வாகனத்திலும், நாளை அனுமந்த வாகனத்திலும் உத்சவர் எழுந்தருள்கிறார். கருட சேவை, வரும் 5ம் தேதி நடைபெறும். வரும் 8ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. வரும் 9ம் தேதி சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோத்சவம் நிறைவுபெறுகிறது.
மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்