செங்கை ரயில் நிலைய வளாகத்தில் டூ-வீலர் திருட்டு அதிகரிப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்வதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதன் வழியாக, சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் சென்று வருகின்றன.

இந்த ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, 20,000க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.

ரயில் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த மூன்று வாகன நிறுத்தங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் சிலர், இருசக்கர வாகனங்களை இங்கு நிறுத்தி விட்டு செல்கின்றனர். இடம் கிடைக்காதவர்கள்

தங்களது வாகனங்களை, ரயில் நிலைய வளாகத்தில், ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இந்த வாகனங்களை மர்ம நபர்கள் சிலர் திருடி செல்கின்றனர். வாகனங்கள் திருடுபோவது குறித்து, செங்கல்பட்டு நகர போலீசில் பயணியர் புகாரளித்தால் நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலைக்கழிப்பதாகக் கூறப்படுகிறது.

ரயில் நிலைய வளாகத்தில், நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால், திருட்டு சம்பவங்களை தடுக்க முடியும். ஆனால், போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என பயணியர் குற்றம்சாட்டுகின்றனர்.

ரயில் நிலைய வளாகத்தில், இருசக்கர வாகன திருட்டை தடுத்த நிறுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.

@block_B@ ரயில் நிலைய வளாகத்தில், இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்கிறோம். ஐந்து நாட்களுக்கு முன் எனது நண்பரின் இருசக்கர, வாகனம் திருடு போனது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசாரிடம் புகார் அளித்தால், வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால் வாகன திருட்டை தடுக்கலாம். கே. வெங்கடேசன் ரயில் பயணி செங்கல்பட்டுblock_B

Advertisement