புத்த பூர்ணிமா கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து
புதுடில்லி: புத்த பூர்ணிமா இன்று (மே 01) கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தர் பிறந்த நாளும், அவர் ஞானம் பெற்ற அதே நாளும் சேர்த்து புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தை புத்த பூர்ணிமா தினமாகவும் புத்த ஜெயந்தி தினமாகவும் மிகவும் விமரிசையாக உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, புத்த பூர்ணிமா விழா இன்று(மே 01) கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமா தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவு: புத்த பூர்ணிமா நல்வாழ்த்துகள். பகவான் புத்தரின் உயரிய லட்சியங்களை நனவாக்குவதில் எங்களின் உறுதிப்பாடு மிகவும் வலுவானது. அவரது சிந்தனைகள் நம் சமூகத்தில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் உணர்வை மேலும் வலுப்படுத்தட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள, 'சாய் குல்வந்த்' அரங்கில், இன்றும் நாளையும் புத்த பவுர்ணமி விழா நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதியையும் வெற்றிக்கான வலியையும் போதித்தவர் தான் புத்தர்
புத்தரின் போதனைகளை பின்பற்றினால் வாழ்க்கையில் நிச்சயம் அமைதியும் வெற்றியும் கிட்டும்மேலும்
-
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப்பொருள் பறிமுதல்; அதிகாரிகளுக்கு அமித் ஷா பாராட்டு
-
மானாமதுரையில் வெண்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகர் *ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
-
புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் புத்த பூர்ணிமா விழா கோலாகலம்
-
ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் 2.11 லட்சம் கோடி ரூபாய்
-
இன்றைய நிகழ்ச்சிகள்
-
வேளாங்கண்ணிக்கு நாளை செல்கிறார் விஜய்