தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

34


சென்னை: இன்னும் 2,3 நாட்களில் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிற உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொழிலாளர் தினத்தை ஒட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுத் தூணில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது: உரிமைக்காகவும், உழைப்பு ஏற்ற ஊதியம் பெற வேண்டும் என்பதற்கு மே தின விழா கொண்டாடப்படுகிறது.

முதலில் இந்தியாவிலேயே மே முதல் நாள் விழாவை சென்னையில் தான் கொண்டாட துவங்கி இருக்கிறோம். திமுகவினர் உழைத்திருக்கும் உழைப்பின் பலனை, வரும் மே 4ம் தேதி பெற இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை, துளி அளவும் கூட மாற்றமில்லை.


@quote@கருத்துக் கணிப்புகளை வைத்து கூறுகிறேன் என்று யாரும் கருத வேண்டிய அவசியமில்லை.quote

இன்னும் 2,3 நாட்களில் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிற உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் தொழிலாளர் நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

@block_P@

உழைப்பால் உயர்வோம்!

இது குறித்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உழைக்கும் கரங்களைப் போற்றுவோம்; உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். உழைப்பால் உயர்வோம் என்று இரவு பகலாக உழைத்து வரும் உழைப்பாளர்களுக்கான உரிமைகள் முழுமையாக அவர்களுக்கு கிடைக்க உழைப்பாளர்களின் வாழ்வாதாரம் மேலும் உயர உறுதியேற்போம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.block_P


@block_G@

முன்னேற்றத்தின் அடித்தளம்

இது குறித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேச வளர்ச்சிக்காக, தங்களின் வியர்வை சிந்தி, கடின உழைப்பைக் கொடுத்து, நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் ஒவ்வொரு தொழிலாளருக்கும், எனது இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எந்த அங்கீகாரமும் எதிர்பார்க்காமல், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றி. உழைப்பாளர்கள் உரிமை, பாதுகாப்பு, மரியாதை, இவற்றை உறுதி செய்வதே, நமது நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளமாக அமையும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.block_G

Advertisement