வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
ஆர்.கே.பேட்டை:திருமணமான பெண்ணிடம் சமூகவலைதளத்தில் பழகி வந்தவர், வீடு புகுந்து அத்துமீறி தாக்கியுள்ளார். அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, அய்யனேரி காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி ரம்யா, 28. சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ஜெம்ஸ் மகன் இர்வின், 35. அய்யனேரியில் உள்ள சர்ச்சிற்கு வந்து செல்லும் இர்வினுக்கு, ரம்யாவிடம் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சமூகவலைதளம் வாயிலாக பழகி வந்தனர். இருவரும் மொபைலிலும் பேசி வந்துள்ளனர்.
சமீபகாலமாக இர்வினுவுடன் பேசுவதை ரம்யா தவிர்த்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இர்வின், மே 1 ஆம் தேதி ரம்யாவின் வீட்டிற்குள் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ரம்யாவை தாக்கிய இர்வின், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து வெங்கடேசன், ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் மே 2 ல் இர்வினை கைது செய்தனர்.
மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்