செங்கையில் 12 மையங்களில் நீட் தேர்வு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 12 மையங்களில், 6,480 மாணவ - மாணவியர் (மே 3) நீட் தேர்வு எழுதுகின்றனர்.

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு (மே 3), நாடு முழுதும் மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை நடக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளி எண் - 1ல் 480 மாணவ - மாணவியர், கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளி எண் 2ல், 480 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.அதே போல், கல்பாக்கம் அணுசக்தி மத்திய பள்ளி -1 ல் 360, கல்பாக்கம் அணுசக்தி மத்திய பள்ளி -2 ல் 480, அணுபுரம் அணுசக்தி மத்திய பள்ளி 360; தாம்பரம் பி.எம்., ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா எண்-1 ல் 480, தாம்பரம் பி.எம்., ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா எண் -2 ல் 480 பேர், மேலகோட்டையூர் ஐ.ஐ.ஐ.டி.டி.எம்.கே.,வில் 960,

குரோம்பேட்டை எஸ்.டி.என்.பி., வைஷ்ணவ் கல்லுாரி பெண்கள் மையத்தில் 720, மேடவாக்கம் காய்தே மில்லத் ஆண்கள் கல்லுாரியில் 480, பல்லாவரம் செயின்ட் தெரேசா மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 480 பேர் என மொத்தம் 6,480 மாணவர்கள் நீட் தேர்வு எழுகின்றனர்.

இந்த தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேர்வு மையங்களில், தடையில்லா மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என, மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்தார்.

Advertisement