ஈரானில் கிளஸ்டர் குண்டுகள், கண்ணி வெடிகள் வெடித்து சிதறியது; வீரர்கள் 14 பேர் பலி

டெஹ்ரான்: ஈரானில் கிளஸ்டர் குண்டுகள் மற்றும் வான்வழி கண்ணி வெடிகள் வெடித்ததில் வீரர்கள் 14 பேர் உயிரிழந்தனர்.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களின் போது வீசப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் மற்றும் வான்வழி கண்ணி வெடிகள் சில வெடிக்காமல் நிலத்தில் புதைந்து கிடந்தன.

ஈரானின் வடமேற்கு பகுதியில் உள்ள சஞ்சன் மாகாணத்தில், 1,200 ஹெக்டேர் விவசாய நிலங்களில் பரவியிருந்த வெடிக்காத குண்டுகளை அகற்றும் பணியில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு வெடிக்காத வெடிகுண்டு ஒன்றை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் அந்த வெடிகுண்டு திடீரென வெடித்து சிதறியது. இதில், 14 வீரர்கள் உயிரிழந்தனர்; இருவர் படுகாமடைந்தனர்.

உயிரிழந்த வீரர்கள் அனைவரும் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற வெடிகுண்டு நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

Advertisement