வேலுார் உட்பட 12 நகரங்களில் சதமடித்தது வெயில்!

சென்னை: தமிழகத்தில், இன்று 12 நகரங்களில் வெயில் சதம் அடித்தது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இன்று வெயில் வாட்டியது. அதிகபட்சமாக, வேலுார் மாவட்டத்தில் 107.24 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோட்டில் 106.16; கரூர் பரமத்தி 105.8; திருச்சி 105.62; திருத்தணி 103.64; திருப்பத்துார் 103.46; மதுரை, நாமக்கலில் 102.56; சென்னை 102.2; நாகை 100.94; தர்மபுரி 100.76; சேலம் 100.56 டிகிரி வெப்பம் பதிவானது.

இதற்கிடையே, 'கோடை வெயிலால், ஓ.ஆர்.எஸ்., எனப்படும், நீர்ச்சத்து இழப்பை சரி செய்ய உதவும், சர்க்கரை - உப்பு கரைசல் பயன்பாடு, மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், தரமற்றவற்றை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை எச்சரித்துள்ளது.

Advertisement