கோடை கால பயிற்சி முகாம் மாணவர்களுக்கு அழைப்பு

திருப்பூர்:பள்ளி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு முகாம் 6 முதல், 15ம் தேதி வரை ஜெய்வாபாய் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.



இம்முகாமில் சதுரங்கம், ஆர்ட் அண்ட் பெயின்ட், ஏ.ஐ. அண்ட் ரோபோடிக்ஸ், வில்வித்தை, குதிரை சவாரி, ஸ்போக்கன் இங்கிலீஸ், ட்ரோன், போட்டோகிராபி, பேக்கிங் அண்ட் குக்கிங், மண்பாண்டங்கள் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்றுவிக்கப்படுகிறது. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் முகாமில், ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை படிக்கும் மாணவர்கள் பதிவு செய்து பங்கேற்கலாம். இந்நிலையில், பயிற்சி முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மனிஷ்நாரணவரே தலைமையில் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள், விளையாட்டு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement