சித்ரா பவுர்ணமி விழா சத்ய நாராயணா பூஜை
திருப்பூர்: சித்ரா பவுர்ணமியன்று பாண்டுரங்கன் - ருக்மாயி கோவிலில் சத்ய நாராயண பூஜை நடந்தது.
ஸ்ரீசத்ய நாராயண சேவா சங்கம் சார்பில், ராயபுரம் ராஜவிநாயகர் கோவிலில் ஸ்ரீசத்ய நாராயண பூஜை நேற்று நடந்தது. சேவா சங்கத்தன், 39 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 8:00 மணிக்கு ஆஞ்சநேயர் சிறப்பு அபிேஷகம், காலை, 9:00 மணிக்கு மஹா கணபதி ேஹாமம், நவக்கிரஹ ேஹாமம், சுதர்ஷன ேஹாம பூஜைகள் நடந்தது. காலை, 10:30 மணிக்கு கடவுள் வாழ்த்து, ஸ்ரீசத்ய நாராயண சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் நடந்தது தொடர்ந்து, மஹா தீபாராதனையும், பிரசாத வினியோகமும் நடந்தது.

* திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள சபாபதிபுரம் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று, சத்ய நாராயணபூஜை நடந்தது. ஆஞ்சநேயருக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தன. ஸ்ரீராமர், லட்சுமணர், சீதா பிராட்டியுடன், வீர ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்
Advertisement
Advertisement