வல்லுார் அணைக்கட்டில் குளித்த தனியார் நிறுவன ஊழியர் பலி

மீஞ்சூர்: கொசஸ்தலை ஆற்றில் உள்ள வல்லுார் அணைக்கட்டில். நண்பர்களுடன் குளிக்க சென்ற தனியார் நிறுவன ஊழியர், சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை, பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் பிரகாஷ், 31. தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாளான நேற்று, நண்பர்களுடன் மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள வல்லுார் அணைக்கட்டில் குளிக்க சென்றார்.

அப்போது, அரவிந்த் பிரகாஷ், திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானார். நண்பர்கள், போலீஸ் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். மீஞ்சூர் போலீசார் அங்கு விரைந்தனர். தகவலறிந்த பொன்னேரி தீயணைப்பு நிலைய வீரர்கள், அங்கு சென்று, அரவிந்த பிரகாஷை தேடி வந்தனர்.

ஒரு மணி நேர தேடலுக்கு பின், சேற்றில் சிக்கியிருந்த அரவிந்த் பிரகாஷை சடலமாக மீட்டனர். மீஞ்சூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement