டென்னிஸ்: அரையிறுதியில் மனாஸ்

ஷிம்கென்ட்: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் மனாஸ் முன்னேறினார்.
கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில், ஆண்களுக்கான சாலஞ்சர் 2, கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகத் தரவரிசையில் 444வது இடத்திலுள்ள இந்தியாவின் மனாஸ் தாமே, 469வது இடத்திலுள்ள இத்தாலியின் அலெக்சாண்டர் பிண்டாவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை மனாஸ், 6-4 என கைப்பற்றினார். அடுத்து நடந்த இரண்டாவது செட்டையும் இவர், 6-2 என வசப்படுத்தினார். முடிவில் மனாஸ், 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், பெலாரசின் பெடோவ் ஜோடி, ஜெர்மனியின் வேநெல்ட், டென்மார்க்கின் துரோசோவிச் ஜோடியை சந்தித்தது. இதில் ஜீவன் ஜோடி 6-3, 4---6, 8-10 என தோல்வியடைந்தது.

Advertisement