வெவ்வேறு சம்பவத்தில் 3 பேர் மாயம்

தளி; கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே வசிப்-பவர், 16 வயது சிறுமி; நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், ஜவளகிரியை சேர்ந்த ஹரிஷ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


* ஓசூர் மத்திகிரி ராயல் டவுன் பகுதியை சேர்ந்-தவர் எல்லப்பா, 38, கட்டட தொழிலாளி; கடந்த, 28ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் எல்லம்மா, 61, புகார்படி மத்திகிரி போலீசார் தேடி வருகின்றனர்.* சூளகிரி தாலுகாவை சேர்ந்தவர், 17 வயது சிறுமி; கடந்த, 29ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி திரும்பி வரவில்லை. அவரது தந்தை தேன்கனிக்-கோட்டை அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement