ரயில்வே கோட்ட அலுவலகம் முற்றுகை
சேலம்: இந்திய ரயில்வே துறையில் ஆட்குறைப்பு செய்யும் மத்திய அரசை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
இதற்கு தலைமை வகித்த, சேலம் மாவட்ட செயலர் பெரிய-சாமி கூறியதாவது: மத்திய அரசு, அனைத்து பொதுத்துறை நிறுவ-னங்களையும் மூடும் நோக்கில் செயல்படுகிறது. குறிப்பாக ரயில்வே துறையை தனியார் மயமாக்க முடிவு எடுத்து, ஆட்கு-றைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதனால் தென்னக ரயில்வேயில், 30,000க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாகும் அபாயம் ஏற்பட்டு, ஊழியர்களின் பணிப்பளு பலமடங்கு அதிக-ரிக்கும். இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டிய மத்திய அரசு, மாறாக சீர்குலைத்து வருகிறது. அதனால், 2 சதவீத ஊழி-யர்கள் பணி நீக்கத்தை ரத்து செய்து நிலவும் காலி பணியிடங்-களை விரைவாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மாநில செயற்குழு உறுப்பினர் அரவிந்தசாமி, மாவட்ட செயலர்-களான, நாமக்கல் சரவணன், கிருஷ்ணகிரி இளவரசன், தர்மபுரி கோவிந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது 17.5 கிலோ பறிமுதல்
-
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் மறியல்
-
குறையும் நிலத்தடி நீர்மட்டத்தால் விவசாயிகள் எதிர்பார்ப்பு * குளிர்விக்குமா கோடைமழை
-
சிவகாசியில் டிராபிக் போலீசார் பற்றாக்குறை போக்குவரத்தில் பாதிப்பு
-
ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு ஒரே நாளில் 41 வழக்குகள் பதிவு
-
போலீஸ் கொடி அணிவகுப்பு