திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
நமது நிருபர்
ஓட்டு எண்ணிக்கையில், மேற்குவங்க அரசு ஊழியர்களை நியமிக்க கோரி, திரிணமுல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யாரை நியமிக்க வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் முடிவு. அதில் தலையிட முடியாது எனக் கூறி அக்கட்சிக்கு நீதிமன்றம் மீண்டும் குட்டு வைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்., - எதிர்க்கட்சியான பா.ஜ., இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த சூழலில், ஓட்டு எண்ணிக்கை பணியில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களை மேற்பார்வையாளர்களாக நியமித்து, தேர்தல் கமிஷன் கடந்த 13ல் சுற்றறிக்கை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளும் திரிணமுல் காங்., கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'ஓட்டு எண்ணிக்கை பணியில் யாரை வேண்டுமானாலும் தேர்தல் கமிஷன் நியமிக்கலாம்' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் திரிணமுல் காங்., மேல்முறையீடு செய்தது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில், அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திரிணமுல் காங்., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்வைத்த வாதம்:
ஓட்டு எண்ணிக்கை பணியில் மத்திய அரசின் ஊழியர்களை நியமிக்கும் சுற்றறிக்கை, ஏப்., 13-ம் தேதியே வெளியிடப்பட்டது. ஆனால், ஏப்., 29ல் தான் எங்களுக்கு தெரிய வந்தது. ஓட்டு எண்ணிக்கை பணியில் மத்திய அரசு பிரதிநிதி இருக்கும் போது, முறைகேடு நடக்கும் என தேர்தல் கமிஷன் அஞ்சுவது ஏன்?
ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை மேஜையிலும், ஏற்கனவே நுண் பார்வையாளர் என்ற பெயரில் மத்திய அரசு அதிகாரி இருக்கிறார். அப்படி இருக்கையில், மத்திய அரசு ஊழியர்களை மீண்டும் பணியமர்த்துவது ஏன்? சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும், மாநில பிரதிநிதிகளை தேர்தல் கமிஷன் இன்னும் நியமிக்கவில்லை. மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே நியமிக்க போகிறோம் என, ஏன் எங்களிடம் முன்கூட்டியே சொல்லவில்லை?
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி ஜாய்மால்யா பக்சி, “ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர், உதவியாளர் ஆகிய இருவருமே மத்திய அரசு ஊழியர்களாக இருக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் ஒருவேளை முடிவு செய்திருந்தாலும் கூட, அதில் நீதிமன்றம் தவறு கண்டிருக்க முடியாது. மத்திய அல்லது மாநில அரசு அதிகாரிகளை நியமிக்கலாம் என, விதிகள் தெளிவாக கூறுகின்றன. எனவே, தேர்தல் கமிஷனின் சுற்றறிக்கையை விதிகளுக்கு எதிரானது என, எங்களால் சொல்ல முடியாது,” என்றார்.
இதையடுத்து, “சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, ஓட்டு எண்ணிக்கையின் போது மாநில அரசு பிரதிநிதிகளும் இருப்பதை உறுதி செய்யும்படி தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,” என, கபில் சிபல் கோரிக்கை விடுத்தார். “சுற்றறிக்கையின்படி நடக்க வேண்டும் என்றால், திரிணமுல் காங்., நீதிமன்றத்தை நாடியது ஏன்?” என, நீதிபதி ஜாய்மால்யா பக்சி கேள்வி எழுப்பினார்.
தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எஸ்.நாயுடு வாதிடுகையில், “தேர்தல் நடத்தும் அலுவலர் ஒரு மாநில அரசு ஊழியர். எந்த பிரிவைச் சேர்ந்த ஊழியர்களையும் பணியமர்த்த அவருக்கு அதிகாரம் உண்டு. ஓட்டு எண்ணிக்கையின் போது மாநில அரசு ஊழியர்களும் இருப்பர்.
மேலும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் இருப்பர். அப்படி இருக்கையில், முறைகேடு நடக்கும் என்ற திரிணமுல் காங்கிரசின் அச்சம் தேவையற்றது,” என்றார். இதையடுத்து, 'கூடுதல் உத்தரவுகள் தேவையில்லை' எனக் கூறி, திரிணமுல் காங்கிரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
@block_G@
தேர்தல் ரத்து
தற்போது, பால்டா தொகுதிக்கு உட்பட்ட சில ஓட்டுச்சாவடிகளில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த ஒரு தொகுதியில்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வன்முறைகள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மே 21ம் தேதி பால்டா தொகுதியில் உள்ள 285 ஓட்டுச்சாவடி மையங்களிலும் மறு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் ஓட்டுக்கள் மே 24ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.block_G
வாசகர் கருத்து (15)
Sampath - Chennai,இந்தியா
03 மே,2026 - 16:40 Report Abuse
கபில் சிபில் - கராச்சி கான் என்று மக்களால் அன்போடு அழைக்க படுவார் இனி 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03 மே,2026 - 13:13 Report Abuse
ஏற்கனவே இந்த மமதா அம்மாகாரு அடிபடாவிட்டாலும், சும்மா மக்கள் கவனத்தை ஈர்க்க பேண்ட் எயிட் ஒட்டிப்பாங்க. இப்ப குட்டு வேற வாங்கிட்டாங்க. இனி உடம்பு பூரா வெள்ளைத்துணியால் கட்டுதான்... And the Oscar for Best Acting goes to Mamata. 0
0
Reply
venugopal s - ,
03 மே,2026 - 13:03 Report Abuse
மம்தா பானர்ஜி பாஜகவைப் போல் நீதிமன்றங்களிடம் நிறைய குட்டு வாங்கிய அனுபவம் இல்லாதவர் பாவம்! 0
0
Kumar Kumzi - ,இந்தியா
03 மே,2026 - 14:10Report Abuse
பாஜக பற்றி பேசுனா தானே ஹிஹிஹி... நல்லா கூவுங்க 0
0
duruvasar - indraprastham,இந்தியா
03 மே,2026 - 14:27Report Abuse
திமுகவைபோல் செருப்படி வாங்கவில்லை. மானம் இல்லாத கட்சி திமுக . 0
0
Reply
Rajasekar Jayaraman - ,
03 மே,2026 - 11:31 Report Abuse
ஒரு பேய் ஆட்டம் ஆடி சுப்ரீம் கோர்ட்டில் உதைப்பட்டு முடங்கி அமர்வார் அதுவரை சும்மா இருக்க மாட்டார். 0
0
Reply
நிமலன் - ,
03 மே,2026 - 09:49 Report Abuse
மத்திய ரிசர்வ் காவல் படை உங்களை எவ்வளவு நாட்களுக்கு பாதுகாக்கும். இங்கு நான் நியமித்த இஸ்லாமிய காவல் அதிகாரிகளும், பணியாளர்களும், ஆட்சி மாறினாலும் எனக்குத்தான் விசுவாசமாக இருப்பார்கள் என்று சொல்கிறாளாம் இந்த திமிர் பிடித்த பெண். 0
0
Rajasekar Jayaraman - ,
03 மே,2026 - 11:32Report Abuse
பொறுப்பில் வைத்திருந்தால்தானே அவர்கள் செய்த தவறின் விளைவாக அவர்களுக்கு தண்டனை கொடுத்து அப்புறப்படுத்துவோம். 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
03 மே,2026 - 09:48 Report Abuse
கபில் சிபல் இன் வாதம் முடிஞ்ச வரைக்கும் பாக்கலாம் என்பதுதானே. கபில் சிபல் ஒரு பணம் பிடுங்கி கேஸ். அதுவும் கள்ள பணம் யாரு நிறைய வச்சிருக்கான்களோ அவன் களுக்கு வாதாடும். எவ்வளவு பிடுங்க முடியுமோ அவ்வளவையும் பிடுங்கிக்கொண்டு ஒப்புக்கு சப்பாணி மாதிரி ஒரு ஆர்கியூமெண்டு. அதில் குட்டு வாங்கினப்பறம் அதே பாயிண்ட்டுக்கு வேண்டுகோள். இந்த லட்சணத்துல சமாஜ் வாடி பார்ட்டி சப்போர்ட்ல இவுரு ராஜ்ய சபா எம் பி யாக இருக்கார். நாடு வெளங்கிடும். 0
0
Reply
Kalyanaraman Subramaniam - ,
03 மே,2026 - 08:06 Report Abuse
திமுக alias Trinamool Congress) இரண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களில் போன்றவர்கள் முன்னிலையில் இருப்பார்கள்.... அவங்க வந்தா இவங்க காட்டிலே மழைதான்!! 0
0
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
03 மே,2026 - 08:59Report Abuse
சொல்றது வெடிச்சி கொண்டாடும் நபர்கள் தானே 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
03 மே,2026 - 07:53 Report Abuse
குறிப்பிட்ட மதத்தினரை, சாதியினரைத் திருப்திப்படுத்தி அரசியல் ஆதாயம் பெறும் வழக்கமுள்ள கட்சிகளுக்கு இப்படிக் குட்டுப்படுவது ஒரு செட்பேக் - பின்னடைவு அல்ல .... மாறாக குறிப்பிட்ட மத, சாதி வாக்குகளை பெரும் முயற்சிக்கு வலு சேர்க்கும் ..... 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
03 மே,2026 - 07:42 Report Abuse
இது வித்தியாசமானது கொஞ்சம் பரவாயில்லை. 0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
03 மே,2026 - 07:28 Report Abuse
திரிணாமுல் பயம் வெளியே தெரிகிறது 0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது 17.5 கிலோ பறிமுதல்
-
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் மறியல்
-
குறையும் நிலத்தடி நீர்மட்டத்தால் விவசாயிகள் எதிர்பார்ப்பு * குளிர்விக்குமா கோடைமழை
-
சிவகாசியில் டிராபிக் போலீசார் பற்றாக்குறை போக்குவரத்தில் பாதிப்பு
-
ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு ஒரே நாளில் 41 வழக்குகள் பதிவு
-
போலீஸ் கொடி அணிவகுப்பு
Advertisement
Advertisement