முடங்கியது பாதாள சாக்கடை திட்ட பணிகள்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், பாலசுப்பிரமணியன்நகர் பகுதிகளில் துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக முடங்கி கிடக்கிறது.
வைகை அணைத் தண்ணீர் மூலம் திருப்பரங்குன்றம் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்புவதுடன், 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அந்தந்த பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருப்பது இக்கண்மாய்களே.
கண்மாய்களில் கழிவுநீர்: திருப்பரங்குன்றத்தின் ஒரு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தென்கால் கண்மாய்க்குள்ளும், தென்பரங்குன்றம் பகுதி கழிவுநீர் பானாங்குளத்திலும், நெல்லையப்பபுரம், சுந்தர் நகர் கழிவு நீர் சேமட்டான் குளத்திலும், பாம்பன் நகர் கழிவுநீர் குறுக்கட்டானிலும், திருநகரின் ஒரு பகுதி கழிவுநீர் புளியங்குளம் கண்மாயிலும், எஸ்.ஆர்.வி. நகர் பகுதி கழிவுநீர் நிலையூர் பெரிய கண்மாய்க்குள்ளும் விளாச்சேரி, பாலசுப்பிரமணிய நகர், தேவிநகர், சந்திராபாளையம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நிலையூர் கால்வாயிலும் கலக்கிறது.
ஆண்டு முழுவதும் புளியங்குளம் கண்மாய், சேமட்டான் குளம் கண்மாய், நிலையூர் கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நிலத்தடி நீர் மாசடைகிறது. அப்பகுதி நிலத்தடி நீரின் தன்மையும் மாறிவிட்டது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோயை பரப்புகின்றன. துர்நாற்றம் வீசுகிறது. கண்மாய்களில் உள்ள வைகை தண்ணீருடன் கலக்கும் கழிவு நீரால் விவசாயமும் பாதிக்கிறது.
மேற்கண்ட கண்மாய்களில் கலக்கும் கழிவு நீரை வெள்ளக்கல் கழிவு நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்ல சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவக்கப்பட்டது. திருநகர், பாலசுப்ரமணிய நகர், ஹார்விபட்டி உள்பட சில பகுதிகளில் அப்பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை.
பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மீண்டும் துவங்கவும், சுகாதார சீர்கேட்டில் இருந்து திருப்பரங்குன்றம் மக்களையும், நீர் நிலைகளையும் காப்பாற்றவும் நடவடிக்கை தேவை.
மேலும்
-
திண்டிவனம் (தனி) தொகுதி வி.சி., வெற்றி
-
வெற்றிச்சான்றிதழ் தரமறுப்பு தே.மு.தி.க.,வினர் அதிருப்தி
-
திருக்கோவிலுாரில் கடைசி சுற்று வரை அ.தி.மு.க., – த.வெ.க., மாறிமாறி முன்னிலை 285 ஓட்டில் பழனிசாமி வெற்றி
-
தபால் ஓட்டிலும் தி.மு.க., முன்னிலை
-
திண்டிவனத்தில் முடிவு அறிவிப்பதில் தாமதம்
-
விளம்பர செய்தி... படம்... ஸ்ரீ வித்யோதயா கல்லுாரியில் ஆண்டு விளையாட்டு விழா