திண்டிவனத்தில் முடிவு அறிவிப்பதில் தாமதம்

திண்டிவனம்: திண்டிவனம் (தனி) தொகுதியில் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

திண்டிவனம் தொகுதியில் வி.சி., சார்பில் வன்னிஅரசு, அ.தி.மு.க., சார்பில் அர்ஜூனன் உள்ளிட்ட 14 பேர் போட்டியிட்டனர். நேற்று மாலை 6:00 மணியளவில் 21வது சுற்றில் வி.சி., வேட்பாளர் 384 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் கள்ளக்கொளத்துார், அனுமந்தைகுப்பம் பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தபட்ட ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

தொடர்ந்து வி.வி., பேட்டில் பதிவான ஓட்டு ரசீதுகளை சரிபார்த்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

பின், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் கள்ளக்கொளத்துார், அனுமந்தைகுப்பம் ஆகிய ஓட்டுச்சாவடிகளில் பதிவான வி.வி., பேட் ரசீது சரிபார்க்கும் பணி நடந்தது. இதன் தொடர்ச்சியாக அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இறுதியாக 7:30 மணிக்குப் பின், வி.சி., வேட்பாளர் வன்னிஅரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

Advertisement