காங்கேயம் தொகுதியில் அமைச்சர் மூன்றாமிடம்
திருப்பூர்: தமிழகம் முழுதும் வீசிய த.வெ.க., அலையால், அமைச்சர்கள் பலரும் தோல்வியை சந்தித்தனர். காங்கேயம் தொகுதியில் போட்டியிட்ட செய்தித்துறை அமைச்சர் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதி, அமைச்சர் தொகுதி என்பதால், வி.ஐ.பி., தொகுதியாக கருதப்பட்டது.
இத்தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ் போட்டியிட்ட நிலையில், சிட்டிங் அமைச்சர் சாமிநாதனுக்கு தி.மு.க., மீண்டும் 'சீட்' வழங் கியது.
நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், வேட்பாளர் நடராஜ், 70,753 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். த.வெ.க., வேட்பாளர் மணிக்கவுண்டர், 62,815 ஓட்டுகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார்.
சிட்டிங் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சாமிநாதன், 58,931 ஓட்டுகள் பெற்று, மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடம் பெ ற்ற அ.தி.மு.க., வேட்பாளரை விட, 6,983 ஓட்டுகள் குறைவாக பெற்றதால், த.வெ.க., இரண்டாமிடம் பெற்றது.
தி.மு.க., 11,000 ஓட்டுகள் குறைவாக பெற்றதால், மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது.
மேலும்
-
ஸ்டாலின் தோல்வி; எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி?
-
அம்மா, மகன், மருமகனுக்கு வெற்றி; தோல்வி அடைந்த சகோதரிகள்
-
சென்னை இனி தி.மு.க., கோட்டை இல்லை
-
மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது பா.ஜ., மம்தாவின் 15 ஆண்டு ராஜ்யத்துக்கு முடிவுரை எழுதி சாதனை
-
கோவையில் இரு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது காங்கிரஸ்
-
அசாமில் பா.ஜ.,வுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி 82 தொகுதிகளை கைப்பற்றி சாதனை