மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: உதயநிதி

சென்னை: ''தேர்தலில் தமிழக மக்கள் ஒரு முடிவெடுத்துள்ளனர். தீர்ப்பு கொடுத்துள்ளனர். அந்த தீர்ப்பை, நாங்கள் அனைவரும் தலைவணங்கி ஏற்கிறோம்,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற்ற பின், அவர் அளித்த பேட்டி:

தொகுதி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து, வெற்றி பெற வைத்துள்ளனர். என் வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள் மற்றும் மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏற்கனவே, இந்த தொகுதியில், நல்ல எம்.எல்.ஏ.,வாக பணியாற்றினேன். இந்த முறை மேலும் பணியாற்ற, எனது தலைவர் வழியிலும், வழிகாட்டுதல்படியும் செயல்படுவேன்.

சேப்பாக்கம் தொகுதி மக்களுக்காக உழைப்பேன். இந்த தேர்தலில் தமிழக மக்கள் ஒரு முடிவெடுத்துள்ளனர்.

தீர்ப்பு கொடுத்துள்ளனர். அந்த தீர்ப்பை நாங்கள் அனைவரும் தலைவணங்கி ஏற்கிறோம். இந்த நேரத்தில், வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசுக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு உதயநிதி கூறினார்.

Advertisement