தமிழக தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக; கவர்னருக்கு விஜய் கடிதம்
நமது நிருபர்
தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், கவர்னர் ராஜேந்திர அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க, 118 எம்.எல்.ஏ.,கள் ஆதரவு வேண்டும். அதன்படி, த.வெ.க.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க, வேறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. த.வெ.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ததேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் விஜய் வலியுறுத்தி உள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் 14 நாட்கள் அவகாசம் கேட்டு உள்ளார்.
வாசகர் கருத்து (17)
Anbuselvan - Bahrain,இந்தியா
05 மே,2026 - 16:39 Report Abuse
மைனாரிட்டி ஆட்சியாக இருப்பது ஒரு விதத்தில் நல்லதே. நல்ல திட்டங்களை தீட்ட அமைச்சரவை ஒப்புதல் போதுமானது. சட்டம் அல்லது மசோதா இயற்ற வேண்டுமெனில் அதற்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஒப்புதல் வேண்டும் பொதுவாக. நல்ல மசோதாக்களை கொண்டு வந்தால் அதை மற்ற கட்சிகளை சேர்ந்த அவை உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் நன்று, இல்லையேல் தானாக முன் வந்து ராஜினாமா செய்து சட்டசபையை கலைக்க பரிந்துரை செய்யலாம். 2014இல் திரு கெஜ்ரிவால் லோக்பால் மசோதா வை நிறைவேற்ற முடியாதலால் இவ்வாறு செய்தார். 2015இல் அதிகமான வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் மறுபடியும் ஆட்சியை பிடித்தார். தற்போதைக்கு திமுகவிற்கோ அல்லது அதிமுகவிற்கோ இந்த TVK ஆட்சியை கலைக்க நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாட்டார்கள். 0
0
Reply
Vasan - ,இந்தியா
05 மே,2026 - 16:20 Report Abuse
அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இரு கட்சிகள் தலா 117 தொகுதிகள் வென்றிருந்தால் என்னவாகி இருக்கும்? 0
0
Reply
Nancy - London,இந்தியா
05 மே,2026 - 16:18 Report Abuse
0
0
Reply
Vasan - ,இந்தியா
05 மே,2026 - 16:16 Report Abuse
14 நாட்கள் அவகாசம் கேட்டிருக்க கூடாது. ஜனநாயகம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் வரை கேட்டிருக்கலாம். 0
0
Reply
Durai Kuppusami - chennai,இந்தியா
05 மே,2026 - 13:04 Report Abuse
இந்த கவர்னர் அந்த கவர்னர் மாதிரி இல்லை... பார்த்து 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
05 மே,2026 - 13:01 Report Abuse
14 நாட்கள் அவகாசம் போதுமா பேரம் பேச ???? 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
05 மே,2026 - 12:16 Report Abuse
எடபடியார் இனியும் muttaalai போல முடிவெடுக்காமல் அண்ணாமலையை கலந்தாலோசிக்கும் நேரம் வந்துள்ளது உணர்வாரா ? 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
05 மே,2026 - 12:07 Report Abuse
ஆர் என் ரவி இங்கு இல்லை என்கிற வருத்தம் இருக்கு.இருந்தாலும் அவர் திருட்டு பாடல்களை வறுத்து எடுத்தார். அவரை இந்த திருட்டு பயல்கள் பேட்ரோல் வெடி குண்டு வீசி தீர்த்து கட்ட பார்த்தான்கள். நல்ல வேளை தப்பிச் சுட்டார். அவர் போட்ட வெடி சாராய யாவாரிக்கு கிலோ கணக்கில் தமிழ் மண்ணை அள்ளி முகஸ் தலையில் கொட்டிவிட்டது. அடுத்து மம்மூதா தலையில் வங்காள மண்ணை கிலோ கணக்கில் அள்ளி கொட்டிவிட்டது. ரவி போன ரெண்டு இடமும் சக்ஸஸ். தி கிரேட் ரவி.. 0
0
Reply
Palanivel பழனிவேல் Kuppusamy - ,இந்தியா
05 மே,2026 - 11:46 Report Abuse
73 திமுகவின் ஆதரவு பெற்று அதிமுக ஆட்சி நடத்த வாய்ப்பு இருக்ககாலம்? 0
0
Reply
தமிழ் நாட்டு அறிவாளி - Chennai,இந்தியா
05 மே,2026 - 10:55 Report Abuse
தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டு விஜய் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறலாம். ஆனால் அதே மனப்பான்மை எதிர்காலத்தில் சவால்களையும் உருவாக்கக்கூடும்.
இந்தத் தேர்தலில் வாக்களித்த மக்களின் தீர்மானத்தை “சிந்திக்காதவர்கள்” என்று பொதுவாக வகைப்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல. ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கும் ஒரு கருத்தை பிரதிபலிக்கிறது.
இப்போது முக்கியமானது, அவருக்கு வாக்களித்தவர்களையும், வாக்களிக்காதவர்களையும் சமமாகக் கவனிக்கும் ஆட்சி அமைப்பதே. அதுவே ஒரு நல்ல தலைவரின் அடையாளம்.
அவரை அரசியல் தலைவராக சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தேர்தலில் வெற்றி பெற்ற பின் அவரின் ஆட்சித் திறன் தான் அவரை மதிப்பிடும் முக்கிய அளவுகோல் ஆகும்.
இனிமேல் அவர் எப்படி ஆட்சி நடத்துகிறார், மக்களின் எதிர்பார்ப்புகளை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதையே நாம் கவனிக்க வேண்டும். 0
0
SULLAN - chennai,இந்தியா
05 மே,2026 - 13:51Report Abuse
சும்மா நடந்தாலே கால்ல சுளுக்குங்றவன் இப்போ கால்ல மைனாரிட்டி அரசின் கூட்டணிங்கிற கல்லை வேற கட்டி விட்டுட்டாங்க ?? எங்க நடக்குறது?? தடுக்கி விழாம இருக்கிறதே சவால்தான். 0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement