‘நோட்டா’வில் 5598 ஓட்டுக்கள்

திண்டுக்கல், மே 6

மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ‘நோட்டா’வில் 5598 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.

தேர்தலில் எந்த ஒரு வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என வாக்காளர் கருதினால் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ‘நோட்டா’ என்ற இளஞ்சிவப்பு நிற பொத்தானை அழுத்தி தங்களது விருப்பத்தை பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. தமிழகத்தில் முதன்முதலில் 2013ல் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் இது அமலானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு தொகுதிககளில் பழநியில் 750 , ஒட்டன்சத்திரத்தில் 1491, ஆத்துாரில் 812, நிலக்கோட்டையில் 642, நத்தத்தில் 596, வேடசந்துாரில் 474, திண்டுக்கல்லில் 833 ஓட்டுக்கள் என 5598 ஓட்டுக்கள் நோட்டாவில் பதிவாகி உள்ளது.

Advertisement