நான்கு வழிச்சாலையில் ஒளிராத விளக்குகள்
உடுமலை: பொள்ளாச்சி – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
பொள்ளாச்சி – திண்டுக்கல் நான்கு வழிச்சாலை திட்டத்தில், உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகிறது.
ஆனால், இரு ஆண்டுக்கு முன், திண்டுக்கல் முதல் மடத்துக்குளம் வரையிலான ரோட்டில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில், உடுமலை, பகுதிகளில் பணி முடிவடையாத நிலையிலும் வாகன போக்குவரத்து அதிகளவு காணப்படுகிறது.
அதிலும், பாலப்பம்பட்டி சந்திப்பு, தாராபுரம் ரோடு சந்திப்பு, திருப்பூர் ரோடு மற்றும் பெதப்பம்பட்டி ரோடு சந்திப்பு, அந்தியூர் சந்திப்பு பகுதிகளிலும், ரோட்டில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் அவற்றின் கீழும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த ரோட்டில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டும், இரவு நேரங்களில் ஒளிராததால், இருட்டாக காணப்படுகிறது. பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மின் விளக்குகளும் எரியாததால், அதிகளவு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
எனவே, பொள்ளாச்சி – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், மின் விளக்குகள் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி