நூலிழையில் நழுவிய 118: த.வெ.க.,வை தடுத்த 17 தொகுதிகள்!
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் 1967 முதல் கோலோச்சி வந்த 'இரு துருவ' அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனிப்பெரும் கட்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். ஆனாலும், வெறும் 10 இடங்கள் இடைவெளியில், தனிப்பெரும்பான்மையை நழுவ விட்டுள்ளது. இதற்கு காரணம், 17 தொகுதிகளில் ஏற்பட்ட 'திக் திக்' தோல்விகள் தான்.
நூலிழையில் நழுவிய வெற்றி:
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளை அள்ளிய விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியமைக்க தேவையான 118 என்ற மேஜிக் நம்பரை எட்ட முடியாமல் போனது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், 17 தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பு பறிபோயுள்ளது.
ஆயிரத்துக்கும் கீழ் 'அவுட்':
திருக்கோவிலூர், விக்கிரவாண்டி, குளித்தலை, பழனி, கோவில்பட்டி, ஊட்டி ஆகிய 6 தொகுதிகளில் 1,000 ஓட்டுகளுக்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்திலேயே த.வெ.க., வேட்பாளர்கள் வீழ்ந்துள்ளனர்.
அதேபோல் திண்டுக்கல், கரூர், பாபநாசம், கிள்ளியூர், புதுக்கோட்டை, திருமயம் ஆகிய 6 தொகுதிகளில் 2000-க்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் த.வெ.க., தோல்வியைத் தழுவியுள்ளது. இதுபோக திருவண்ணாமலை, ஏற்காடு, விருத்தாசலம், கோவை தெற்கு, கீழ்வேளூர் ஆகிய 5 தொகுதிகளில் 2,500 ஓட்டுகளுக்குள் வெற்றி வாய்ப்பு கை நழுவியுள்ளது.
ஒருவேளை இந்த 17 தொகுதிகளில் த.வெ.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தால், இன்று தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் விஜய் ஆட்சியை பிடித்திருப்பார். 'அதிர்ஷ்ட தேவதை' நூலிழையில் கதவைத் தட்டியும், 10 சீட் இடைவெளியில் கோட்டை அதிகாரம் விஜய்க்கு நழுவிப்போனது.
கேசவா 96 சீட் வென்ற கலைஞர் காங்கிரசு உதவியுடன் ஆட்சி அமைத்தது உண்மை அதற்கு பிரதிபலனாக 126 சீட் ஜெயித்த காங்கிரசு 40 திமுக எம்பிக்கள் ஆதரவுடன் 5 வருடம் மத்தியில் ஆட்சி செய்ததை மறக்க முடியாது.
வெற்றியடைந்த 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் த வெ க 5000 வோட்டுக்கு கீழ்தான் வெற்றிபெற்றுள்ளது . தேர்தல் கமிஷனில் உள்ள இந்து மாபியாக்களால் கிடைத்ததுதான் 100 தொகுதிகளும். இவராக 10 தொகுதிகளில் கூட வென்றிருக்கமுடியாது
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் உருப்படியாக சொன்ன யோசனையை திரு செல்வப்பெருந்தகையும் திரு சிதம்பரமும் ட, திருமதி சோனியா அம்மையார் அவர்களுடன் நேரடியாக பேசிய விளைவே இது. அவர்கள் ராகுல் காந்தி கூறிய அறிவுரையை ஏற்று இருந்தால் இப்போதைக்கு 160 சீட்டுக்கு மேல் வெற்றி பெற்று இருக்கும் கூட்டணி. காங்கிரஸ் 40 தொகுதிகளில் எளிதாக வென்று இருக்கும். இதுதான் தலைவிதி என்பது. காங்கிரஸ் இப்போதே திரு விஜய் அவர்களுடன் 2029 லோக் சபா தேர்தலுக்கு ஒரு மறைமுக ஒப்பந்தம் போட்டு கொண்டு ஆட்சியில் பங்கு வகித்தோ அல்லது வெளியிலிருந்து ஆதரவோ வழங்கலாம். விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிச்சயம் ஆட்சியில் பங்கு தந்தால்தான் நீண்ட கால உறவுடன் இருப்பார்கள். முஸ்லீம் லீக் மற்றும் தேமுதிகவை ஆட்டத்தில் சேர்த்து கொள்ள கூடாது. முஸ்லீம் லீக் கட்சி மத சார்பான கட்சி அதனால்தான். ஆனால் தேமுதிக நம்பக தன்மையே இல்லாத கட்சி - மேலும் இப்போதான் ராஜ்யசபா சீட் திமுகவிடம் கேட்டு வாங்கி உள்ளனர். அதற்காகவாது அவர்கள் திமுகவிடம் இருக்க வேண்டிய கட்டாயம்.
இது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய தருணம். சில அரசியல்வாதிகளும் கட்சிகளும் பொது நம்பிக்கையை குலைத்திருப்பது உண்மைதான் — ஆனால் சிலரின் செயல்கள் அனைவரின் திறனையும் நிர்ணயித்துவிட கூடாது. இளைய தலைமுறை தலைவர்கள் முன்னே வந்து, தங்களை நிரூபித்து, இந்த கதையை மாற்றி எழுதுவதற்கு இடமும் நேரமும் கொடுக்கப்பட வேண்டும். மாற்றம் என்பது ஒரே இரவில் நிகழ்வதில்லை — இளம் திறமைகளில் நம்பிக்கை வைத்து பொறுமையாக காத்திருப்பதே முக்கியம்.
தயவு செயது ட்ராவிடம் என்றால் என்ன வென்று பகிரவும்
சினிமா மோகம், அதிர்ஷ்டம் என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் விஜய்யின் வெற்றிக்கு பிரதான காரணமாக இருந்தது விடியலின் பிரிவினைவாதக் கொள்கைதான். ஒரு மனிதனை தரக்குறைவாக பேசும் போது அது அனுதாபமாகவும் மாறிவிடும். அதுவும் நடந்திருக்கின்றது. அதை சிலர் இன்னும் செய்வது விஜய்க்கே நன்மை தரும். மற்றது எடப்பாடியின் பிடிவாதம். இனிவரும் காலங்களில் இந்த மூன்று கட்சிகளும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. அதிமுக தவேகாவுக்கு ஆதரவளிப்பது காலத்தின் கட்டாயம். இல்லையேல் பிரிவினைவாதிகள் பிடியில் மீண்டும் தமிழகம் சென்றுவிடும். அதிமுக இதை பரிசீலனை செய்யவேண்டும். திராவிடமொடல், பிரிவினைவாதம், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டுமாயின் அதிமுக சிந்தித்து செயல்பட வேண்டும் .
ஏன் ஒரு வோட்டு வித்தியாசத்தில் த வெ க திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி.
தவெக வும் திராவிஷக்கட்சிதான்.
உன் ஆசை எக்காலத்திலும் நிறைவேற வாய்ப்பில்ல... ராசா...? வடக்கன்ஸ்....சை விட படித்த, அறிவு மழுங்கிய முட்டாள்களாகிய தமிழ்நாட்டு மக்கள் நடிகனை தேடிபிடித்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தியுள்ளனர். இத்தனை நாட்களாய்... வடஇந்தியர்களை... இந்திக்காரர்களை தப்பாக திட்டியதற்கு மன்னிப்பு கோருகிறேன்... ஏனெனில்... அவர்களாவது படிப்பறிவின்மை, சமுதாய முன்னேற்றமின்மை போன்ற இல்லாமையின் காரணமாக முட்டாள்களாக இருந்திருக்கிறார்கள்... அதில் தவறில்லை... ஆனால், படிப்பறிவும், அறிவாளிகளுமான தமிழ்நாட்டு மக்கள் படித்த, பண்பட்ட முட்டாள்களாய் இருந்திருக்கிறார்கள்... அவர்கள் தன் தலையிலே... மண்ணை அள்ளிக் கொட்டிக் கொள்ளவில்லை... நெருப்பை அள்ளி தங்கள் தலையிலே கொட்டிக் கொண்டார்கள்...? ஆரூராரே... கவலைப்படாதீங்க, உங்க கட்சியின் கைவிரலுக்கேற்ப ஆடும் “பொம்மலாட்ட பொம்மை”தான் விஜய்...? ஆட்டுவிப்பவன்படியே ஆடுவான் இந்த நடிகன்...?
ம்ம்ம் நீ திருட்டு கூட்டத்துக்கு மொரட்டு முட்டு குடுக்குறத பகுத்தறிவுன்னு சொல்லி உன்னை அறிவாளின்னு நெனச்சுக்குற அடிமுட்டாள்தனத்தை சரிபண்ணமுடியாது. நீ சாவுறவரைக்கும் முரட்டு முட்டு குடுக்கவேண்டியதுதான்.
10 தொகுதிகளில் த வெ க 2000க்கும் குறைவான வாக்குகளில் தான் வெற்றி, 20 தொகுதிகளில் 3000க்கும் குறைவான வாக்குகளில் தான் வெற்றி. இது மாறியிருந்தால் என்ன நிலைமை என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் தினமலர் ஆசிரியரே....
ஏன் இந்த பாரபட்சம்? மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தாவெக வெற்றி பெற்ற தொகுதிகள் எத்தனை? அதையும் சேர்த்து வெளியிடுங்கள். திருப்பத்தூர் அமைச்சர் ஒரு ஓட்டில் தோற்றார். சென்னை போன்ற பெருநகரங்களைத் தவிர்த்து பெரும்பாலான இடங்களில் குறைந்த வாக்கு சதவீதத்தில் தான் வெற்றி பெற்றுள்ளனர்.
நீங்க வேற... நேத்துலந்து மாத்தியாச்சு, தன் கொள்கையை மாத்திகிட்டாச்சு.... இனி ஐந்து வருடங்கள் “டிவிகே... டிவிகே... டிவிகே...” கோஷம்தான் கேட்கும் இங்கு...?
ஆளுங்கட்சிக்கு நோகாமல் இருக்கவேண்டுமா?