வென்றவர்கள் பொறுப்போடு செயல்பட வேண்டும்; சத்குரு
கோவை: ஜனநாயக திருவிழாவில் வெற்றி பெற்றவர்கள், மக்கள் மீது பொறுப்புணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
தமிழகம், கேரளம், மேற்குவங்கம் அசாம், புதுச்சேரி ஆகியவற்றிற்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இந்த நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் வெளியானது. மேற்குவங்கம், அசாம், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. தமிழகத்தில், த.வெ.க., 108 இடங்களை கைப்பற்றியுள்ளது.கேரளத்தில், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனநாயகத் திருவிழாவில் வெற்றி பெற்றவர்கள், தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மக்கள் மீது மிகுந்த பொறுப்புணர்வுடனும், அர்ப்பணிப்புடனும், இந்த வெற்றியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இது ஜனநாயகத்தின் இயல்பான நடைமுறை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சுயபரிசோதனை செய்து கொள்வதற்கும், ஆட்சி அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கான வழிகளை கண்டறிவதற்கான நேரம். இந்த மாநில மக்களின் கனவுகளும் லட்சியங்களும் நிறைவேற வேண்டும். வாழ்த்துக்கள். வணக்கம். இவ்வாறு, சத்குரு பதிவிட்டுள்ளார்.
ஜோசப்புவை ஆதரிச்சால் அடுத்த சிவராத்ரிக்கு தமன்னா ஆடமாட்டாங்க, திரிஷா ஆடுவாங்க.
சத்குருவின் கருத்து உண்மை ஆக வேண்டும்
சாமியார்கள் சாதுக்களாக இருக்கணும்.
ஆனால் ஆயர்கள் மட்டும் அரசியல்வாதிகளாக இருக்கலாம் ....
காருண்யாவுக்கு கர்த்தரின் கடாட்சம் கிட்டும் நிச்சயமாக கோவையில் பலப் பல தேவாலயங்கள் உருவாகலாம்.
வனத்துறை இடத்தை ஆக்கிரமித்த இவர் மேல நடவடிக்கை எடுக்கவேண்டும்
வனத்துறை இடத்தை ஆக்கிரமித்த காருண்ய மேல் அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஈஷா யோகா மையத்தில் சிலுவை பொறிக்கப்பட்டுள்ளதால் அங்கு யெகோவாவின் சாட்சிகள் மற்றும் பெந்தகோஸ்து சபையினர் பைபிள் கன்வென்ஷன் நடத்த விஜய் சர்க்கார் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.
சரியாக சொன்னிங்க,
இந்த கட்சி பொறுப்பாக ஆட்சி செய்யும் .....புஸ்ஸி ஆனந்த் பொதுப்பணி துறை அமைச்சர் .......லெப்ட் பாண்டி சட்டம் ஒழுங்கு துறை .....லாட்டரி நிதி அமைச்சர் ....
மெத்த படித்த மாஜி மதுரை அமைச்சர் மூலம் ஈஷாவுக்கு ஆப்பு வைக்க மதம் மாற்றிகள் முயற்சி செய்தார்கள் ....அந்த அமைச்சர் இப்போது MLA கூட கிடையாது .....
ஜெயிச்சவங்களுக்கு அஸ்திவாரமே லாட்டரி ..லாட்டரி மதம்மாற்றும் கும்பல்தான் ..இவங்களுக்கு என்ன பொறுப்பு இருக்கும்?? ....கில்லி யாக ஜெயிச்சுட்டாரு ....
இவங்களுக்கு என்ன பொறுப்பு இருக்கும்?? ....இந்த கட்சிக்கு பெங்களூரிலிருந்து IT கம்பெனி காரன் சோழிங்கநல்லூர் வேளச்சேரி வந்து தேர்தல் வேலை பார்த்தானுங்க ....காரணம் மண்டை முழுக்க சினிமா ..கில்லி யாக ஜெயிச்சிடுவாரு ..இங்கே வோட்டு போட்டவன் மொத்தமும் எந்த தொகுதியில் எவன் நிற்கிறான் என்று தெரியாமல் வோட்டு ...தமிழ் நாடு நன்கு படித்து முன்னேறிய மாநிலம்.....படித்த மாநிலமாக விடியல் தமிழ் நாட்டை மாற்றி விடியல் சரித்திரம் படைத்துள்ளது ....மேலும்
-
ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
-
அகற்றப்படாத அபாய மரங்கள் அசம்பாவிதம் ஏற்பட வாயப்பு
-
குடிக்க தண்ணீர் வந்து இரண்டு மாசமாச்சு! போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
-
மது பாட்டில்களில் மாலை அணிந்து வந்த சமூக ஆர்வலர்
-
நாகப்பாம்பை கையில் துாக்கி சென்று சாகசம் செய்தவர் கைது
-
துவங்கியது பருவமழை மேல்நீராறில் 93 மி.மீ., பதிவு