வானமாதேவி உயர்மட்ட பாலத்தில் வளர்ந்துள்ள மரம், செடிகொடிகள் வலுவிழக்கும் அபாயம்

நடுவீரப்பட்டு: வானமாதேவி உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் மற்றும் நடைபாதையில் மரங்கள் புதர் வளர்ந்துள்ளது.

கடலுார் – பண்ருட்டி சாலையில் வானமாதேவி பஸ் நிறுத்தம் அருகில் கெடிலம் ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக  வானமாதேவி, பரிசமங்கலம், வா.பெத்தாங்குப்பம், விலங்கல்பட்டு உள்ளிட்ட பகுதி மக்கள் சென்று வருகின்றனர். பாலத்தின் பக்கவாட்டு சுவர் மற்றும் நடை பாதையில் மரக்கன்றுகள், செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

பாலத்தில் மதுபானம் அருந்தும் போதை ஆசாமிகள், மதுபாட்டில்களை பாலத்தில் உடைத்து செல்கின்றனர். பாலத்தின் அருகே கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. நடைபாதை சரியில்லாததால் பொதுமக்கள் பாலத்திலேயே நடந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. பாலத்தில் தெருவிளக்குகள் எரியாததால், இரவு வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்புவர்களில் இருளில் மக்கள் அவதியடைந்து  வருகின்றனர்.

பாலத்தின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு சுவர்களில் மரக்கன்று வளர்ந்துள்ளதால் பாலம் வலுவிழக்கும் நிலை உள்ளது. ஆகையால் அண்ணாகிராம ஒன்றிய அதிகாரிகள் இப்பாலத்தினை ஆய்வு செய்து, புதர்களை அழித்து விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement