ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து இடையூறு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் தரைப்பால ரோட்டின் இருபுறமும் வாகனங்கள், ஜல்லி கற்கள் ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
அருப்புக்கோட்டை கைலாச ஊருணி தெரு -– எஸ்.பி.கே., பள்ளி ரோடு சந்திப்பில் உள்ள தரைப்பாலம் 5 மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. இவ்வழியாக பூக்கடை பஜார், டெலிபோன் ரோடு, புறநகர் பகுதிகள், செம்பட்டி, தொட்டியான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்வர்.
போக்குவரத்து அதிகமாக உள்ள இப்பாலத்தில் இருபுறமும் வாகனங்களும் நிறுத்தப்பட்டும், கட்டட தளவாட பொருளான ஜல்லி கற்கள் கொட்டி வைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இருபுறமும் ஆக்கிரமிப்பு உள்ளதால் பாலம் டூவீலர்கள் மட்டும் செல்லக்கூடிய அளவில் வழி உள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் சிரமப்பட்டு தான் பாலத்தை கடக்கின்றன.
மாவட்ட நிர்வாகம் இது குறித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் சாதனை
-
மெட்டபாலோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் வேளாண் பல்கலை செயல்முறை பயிற்சி
-
மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரி தேசிய அளவில் 23வது இடம் பிடித்து சாதனை
-
சுகாதாரத்துறை மூலம் டெங்கு விழிப்புணர்வு முகாம்
-
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
-
பூங்காவில் விழுந்த மரம் அகற்றப்படாத அவலம்