நகராட்சியில் ஓடைகள் துார்வாரும் பணி தீவிரம்: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பொள்ளாச்சி: தென்மேற்கு பருவமழையையொட்டி, ஓடைகள் துார்வாரும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, கோவை மாவட்ட கலெக்டர், தென்மேற்கு பருவமழை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, நகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்கினார்.
அதன்படி, பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பெரிய வடிகால்கள், நடுத்தர வடிகால்கள், குடியிருப்பு பகுதிகளில் நிரம்பி சுகாதார சீர்கேடு தடுக்க துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதில், சின்னாம்பாளையத்தில் இருந்து கிருஷ்ணா குளம் வரை செல்லும் நீரோடையை துார்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணிகளை நகராட்சி கமிஷனர் குமரன் தலைமையில், நகர் நல அலுவலர் தாமரைக்கண்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நகராட்சி கமிஷனர் கூறியதாவது: நீரோடை செல்லும் பகுதியில் உள்ள இருபுறங்களிலும் குடியிருப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் இதுபோன்று பருவம் தோறும் வாய்க்கால் துார்வாரப்படுவதால், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படுவதில்லை.
இதுபோன்று சின்னாம்பாளையம் பகுதியில் இருந்து துார்வாரும் பணி துவங்கியுள்ளது. நகராட்சி பகுதியில் உள்ள பெரிய வடிகால், நடுத்தர வடிகால் ஆகியவற்றை நகராட்சி பணியாளர்களை கொண்டு துார்வாரப்படுகிறது.
மேலும், நகராட்சி பகுதிகளில் குப்பை குவியல்கள் இல்லாமல், சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்புக்காக இவை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி