வணிகர் தின கொண்டாட்டம்

விருதுநகர்: விருதுநகரில் மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் வணிகர் தின கொண்டாட்டம் நடந்தது.

குளோபல் பாலிபேக் உரிமையாளர் முரளிதரன் தலைமை வகித்தார். நகராட்சித் தலைவர் மாதவன் பங்கேற்றார்.

வியாபாரிகள் கலந்துரையாடல் நடந்தது. அதை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தனர். சங்க கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஊர்வலமாக மெயின் பஜார் வழியாக சென்று தெப்பம், நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அங்குள்ள காம ராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் வெற்றி, உபத் தலைவர்அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement