குளோபல் சோலார், பேட்டரி எக்ஸ்போ 

கோவை: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் முக்கிய தொழில் கண்காட்சிகளான குளோபல் சோலார் எக்ஸ்போ - 2026 மற்றும் குளோபல் பேட்டரி எக்ஸ்போ - 2026, கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மே 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கும் இக்கண்காட்சியில் 125க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, சோலார், பேட்டரி எரிசக்தி சேமிப்பு, மின்சார வாகன சார்ஜிங் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துகின்றன. 75க்கும் மேற்பட்ட தொழில்துறை நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர். சோலார் துறையில் சாதனை படைத்த 100க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் சோலார் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்த கண்காட்சி தொழில்துறைக்கு முக்கிய தளமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement