செல்போன்கள் திருடிய தொழிலாளி கைது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், பஸ்சில் சென்றவரிடம் செல்போன்களை திருடிய கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் மகேஸ்வரன், 54, கட்டட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் வந்த நிலையில், மீண்டும் குன்னூர் செல்வதற்காக மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஊட்டி செல்லும் பஸ்சில் ஏறினார். பின் ஓடந்துறை அருகில் பஸ் சென்றுக்கொண்டிருந்த போது, அவரது பாக்கெட்டில் இருந்த இரண்டு செல்போன்களை காணவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, மகேஸ்வரன் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் பஸ் ஏறும்போது அவரிடமிருந்து செல்போனை திருடியது காரமடையை சேர்ந்த அபிஷேக் சந்திரன், 31, கூலித் தொழிலாளி என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

----

Advertisement