எம்.பில்., பிஎச்.டி. தேர்வுகள் விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை: பாரதியார் பல்கலையில் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பகுதி – ஒன்று தேர்வுகள் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளதாக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.

ஜூலை 2023ல் பகுதி நேரமாகவும் , ஜூலை 2024 முழுநேரம் மற்றும் பகுதி நேர முறையிலும் பதிவு செய்துள்ள எம்.பில்., மற்றும் பி.எஸ்.டி.,  பகுதி – 1  மாணவர்களுக்கான தேர்வுகள், வரும்  ஜூலை 27 முதல் நடக்கிறது. இந்த தேர்வுகள் பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள தேர்வு மையங்கள் மற்றும் டெல்லி மையங்களிலும் நடக்கிறது.

ஆராய்ச்சி நெறிமுறைகள், ஆராய்ச்சிப்போக்குகள் மற்றும் மேம்பாடுகள், சிறப்புத்தாள் என மூன்றுதாள்களும் முறையே, ஜூலை 27,29 மற்றும் 31ம் தேதிகளில் நடக்கும். தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள், ஹால் டிக்கெட்டகளை  பல்கலையின் அதிகாரப்பூவர்வ,www.b-u.ac.in  இணையதளத்தில்  இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள்  தனியாக  பல்கலையால் வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement