காட்டேரி பூங்காவில் 22ல் மலை பயிர் கண்காட்சி

குன்னுார்: குன்னுார் காட்டேரி பூங்காவில், 22ல் மலை பயிர் கண்காட்சி நடக்கிறது.

குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 66வது பழக்கண்காட்சி வரும், 27ல் துவங்கி 30ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், முன்னதாக காட்டேரி பூங்காவில் வரும், 22 முதல் 24ம் தேதி வரை, 2வது மலை பயிர்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தோட்டக்கலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த இரு கண்காட்சிகளுக்காக, காட்டேரி பூங்கா, சிம்ஸ் பூங்கா ஆகியவை வண்ண மயமாக தயார் செய்யப்படுள்ளது.

Advertisement