த.வெ.க., தொழிற்சங்கம் துவக்க போக்குவரத்து ஊழியர் ஆர்வம்
சென்னை: தமிழகத்தில் போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், 1.16 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், போக்குவரத்து துறையில் சங்கங்கள் உள்ளன. தி.மு.க.,வின் தொ.மு.ச., பேரவை, அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்க பேரவை, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன.
இதுதவிர, அரசியல் சார்பற்ற சில சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. த.வெ.க., தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. இருப்பினும், போக்குவரத்து துறையில் அக்கட்சிக்கு தொழிற்சங்கம் இல்லை. தற்போது, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
எனவே, போக்கு வரத்து துறையில் த.வெ.க., சார்பில் தொழிற்சங்கம் தொடங்க, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரும் போதெல்லாம், அக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் பலமாக இருக்கும். அவர்களின் ஆதிக்கமும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த நிலை தற்போது மாறிவிட்டது.
புதிதாக த.வெ.க., ஆட்சி அமையும் நிலையில், அதன் சார்பில் தொழிற்சங்கம் ஏற்படுத்த ஊழியர்கள் மத்தியில் போட்டி உருவாகியுள்ளது. பிற தொழிற்சங்கங்களில் இருப்போரும், த.வெ.க., சார்பாக பேனர், பதாகைகளை வைத்துள்ளனர். சில பணிமனைகளில், இரு வேறு குழுக்களாக பிரிந்து தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தேவையில்லாதது வேலை செய்யாமல் சம்பளம் வாங்க துடிக்கும் இவர்களை விஜய் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்
தேவையற்ற சங்கம் இது இவர்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்க துடிக்கின்றனர் இது தமிழக வெற்றிக்கழகத்தில் நடக்காது விஜய் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளக் மாட்டார்
ஏற்கனவே கையில் விசில் இருக்கு. என்ன தயக்கம்?
மஞ்ச துண்டு நெய்வேலியில் முதலில் கம்யூனிஸ்டுகளை போலீஸுடன் உதவி யோடு பின்னி பெடலெடுத்து அவர்கள் சாங்களை ஒழித்து தோசமு சாவை ஆரம்பித்தனர். இப்போர் அந்த நிலையய் தொ மூ சாவிற்கு ஏர் படும்.
வேலையை மட்டும் பாருங்கள், தொழிற்ண்சங்கம் அமைத்து அதில் வேலை பார்க்காமல் மொல்லமாரித்தனம் செய்து தொழிலாலர்களுக்கே ஆப்படிப்பது தங்களை வழப்படும்திக்கொள்வது தொழிலாழியிடமே காசு ஆங்கித்தின்னுவது இந்த வேலைஎல்லம் வேண்டாம், இல்லவிட்டால் வேலையை எழுதிக்கொடுத்துவிட்டு போய் கட்சியில் சேருங்கள்
எல்லா போக்குவரத்து ஊழியர்களும் ஒன்றாக இணைந்து ஒரே தொழிற் சங்கத்தின் கீழ் வந்து மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கப்பா. ஒவ்வொரு கட்சி பேரிலும் தொழிற்சங்கம் ஆரம்பித்து போட்டி
மனப்பான்மையெல்லாம் வேண்டாம்.
தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும். தமிழ் நாட்டில் நூற்பாலைகள் தொழிற்சாலைகள் மூடுவதற்கு இவைகள் காரணம்
பதவி அதிகாரம் பண பலம் பெறும் வழியை திராவிடம் காண்பித்துள்ளது.விரைவில் த.வெ.க. அதே பாதையில் செல்லும்.
TNSTC
TNEB
Aavin
TWAD board
கூட்டுறவு துறை
PWD
Sugar and Textile mills
ஆளுங்கட்சி union இல்லாத அரசு துறையாக அமைய வேண்டும்.