வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்.... நவீனமயம்! கோடை கால சுற்றுலாவுக்கு புது ஏற்பாடு
மதுராந்தகம்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளை காண வரும்சுற்றுலா பயணிகளுக்கு புது அனுவம் வழங்கும் வகையில் பறவைகளில் ஓசையை அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கோடை கால சுற்றுலாவுக்கு வரும்பயணியருக்காக மேலும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாயலம் உள்ளது. 8 6 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த ஏரியில் 16 அடியில் நீர் சேமிக்கலாம். வடகிழக்குபருவமழை போதிய அளவு பெய்யாததால் 12 அடியில் தண்ணீர் நிரம்பியது.தற்போது 5 அடியில் மட்டுமே தண்ணீர் உள்ளது.
இங்குள்ள சூழல் காரணமாக வெளிநாட்டு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பறவைகள் வருகின்றன.
இந்தாண்டு பர்மா, வங்கதேசம்,பாகிஸ்தான் மற்றும்நாட்டின் பல மாநிலங்களிலும் இரந்து நத்தை குத்தி நாரை, பாம்பு தாரா சாம்பல் நாரை,நீர்க்காகம்,கூழைக்கடா, கரண்டிவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வகைகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்து தங்கின.
வழக்கமாக செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் குளிர்காலத்தில் வெளிநாட்டுபறவைகள் வர துவங்குகின்றன. டிச, ஜன, மார்ச்,ஏப் ,மே மாதங்களில் கடைசி வாரத்தில் பறவைகள்எண்ணிக்கை குறையும்.
அந்த வகையில் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளிநாட்டுபறவைகள் வரத்து அதிகரித்தது.
தற்போது பறவைஇனங்கள் முட்டையிட்டு குஞ்சு பொறித்து அடைகாத்து சிறிய பறவைகள் வளர்ந்து தங்களது குடும்பத்துடன் தாய்நாட்டிற்கு மீண்டும் சென்றவண்ணம் உள்ளன. கூழைக்கடா , வர்ண நாரை,நத்தை குத்திநாரை, சாம்பல்நாரை உள்ளிட்ட ஆறுவகையான பறவைஇனங்கள் மட்டுமே சரணலாயத்தில்உள்ளன.
இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக பறவைகள் தங்கள் தாய் நாட்டிற்குதிரும்பி செல்வதால்,10,000க்கும் குறைவானபறவைகளே சரணாலயத்தில் உள்ளன.
இவற்றை காண வரும் பயணியருக்கானவசதிகளை சரணலாய நிர்வாகிகள் செய்துள்ளனர். அதிகாலை 6: மணி முதல் 8: மணிவரையில் பறவைகளை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மாலை நேரத்தில் மட்டுமே மொபைல் போனில் பறவைகளை புகைப்படம் எடுக்கலாம். தவிர வெளிநாடு மற்றும் பிற நாட்டுபறவைகள் குறித்து குழந்தைகள் மற்றும்பொதுமக்கள் அறிந்து கொள்ள க்யூஆர் குறியீடு அடங்கிய பலகைகள் சரணலாயத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த க்யூஆர் குறியீடு அடங்கிய பலகைகள் 18 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த க்யூஆர். குறியீட்டை ஸ்கேன் செய்தால் பறவைகளின் ஓசை மற்றும் தகவல்களை பார்க்கலாம் குறிப்பாக ஒவ்வொரு பறவைகளின் ஓசைகள் கேட்பது புதிய அனுபவமாக உள்ளது. பயணியரை பெரிதும் கவர்ந்துள்ளது.
கோடை கால சுற்றுலாவுக்குவரும் பயணியரின் வசதிக்கேற்ப நுழைவால் அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.தற்போது சரணலாயத்தின் உள்ளே அனைத்து குழாய்களிலும் சுத்திகரிப்பு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை
பிளாஸ்டிக் பொருட்களை குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் ஆகியவற்றைகொண்டுசெல்ல முழுமையா தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல்மாசுபடுவதை தடுக்கவும், வனத்துறையினர் இந்த நவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சுற்றுலா பயணியர்கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்து பறிமுதல் செய்கின்றனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக சரணலாய பகுதியில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும்
-
சில்வர் பீச்சில் குவிந்த பொதுமக்கள்
-
குடிநீர், உணவுக்காக வெளியேறும் வன விலங்குகள்... பாதுகாக்கப்படுமா?:வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் பரிதாபம்
-
ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
-
போர் வீரர்களின் நடுகற்கள் வி.சாத்தனுாரில் கண்டெடுப்பு
-
மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர் கலாசாரம் மீண்டும்… அதிகரிப்பு : ஆளுங்கட்சியினருக்கு கரிசனம் காட்டும் அதிகாரிகள்
-
அரசு அருங்காட்சியகத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்