முதல்வர் விஜய்க்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு
சென்னை: தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, த.வெ.க., தலைவர் விஜய், மாநிலம் முழுதும், தனியார் பாதுகாப்பு வீரர்கள் படைசூழ சுற்றுப்பயணம் செய்தார். அதிக கூட்டம் வந்ததால், விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.
தற்போது முதல்வரான நிலையில், அவருக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கி, மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் அறிக்கை அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'இசட் பிளஸ்' பாதுகாப்பில், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் 10 முதல் 15 பேர்; சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உட்பட மொத்தம் 36 முதல் 55 பாதுகாப்பு வீரர்கள் இடம் பெறுவர்.
முதல்வர் விஜய்க்கு, 24 மணி நேரமும், சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்கப்படும். வீரர்கள் 'எம்.பி., - 5' எனும் அதிநவீன துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்.
'இசட் பிளஸ்' பாதுகாப்புடன், முதல்வர் விஜய் சாலையில் பயணிக்கும்போது, அவரது வாகனத்தை சுற்றி, ஐந்து குண்டு துளைக்காத கார்கள் பயணிக்கும்.
'இசட் பிளஸ்' பாதுகாப்பு என்பதால், முதல்வர் விஜயின் பயணத்திட்டம், அந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு, முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும். அவர்கள், பயணத்திட்டத்துக்கு ஏற்ப பாதுகாப்புகளை பலப்படுத்துவர்.
மேலும்
-
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் சாதனை
-
மெட்டபாலோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் வேளாண் பல்கலை செயல்முறை பயிற்சி
-
மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரி தேசிய அளவில் 23வது இடம் பிடித்து சாதனை
-
சுகாதாரத்துறை மூலம் டெங்கு விழிப்புணர்வு முகாம்
-
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
-
பூங்காவில் விழுந்த மரம் அகற்றப்படாத அவலம்