மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரி தேசிய அளவில் 23வது இடம் பிடித்து சாதனை

புதுச்சேரி: மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரி தேசிய அளவில் 23வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் என்.ஐ.ஆர்.எப் மூலம் தரவரிசைப்படுத்தப்படுகிறது. இது, கற்றல் கற்ப்பித்தல் ஆராய்ச்சி பட்டப்படிப்பு முடிவுகள் வேலைவாய்ப்பு மற்றும் சமூகத்தில் கல்லுாரி பற்றிய கருத்தின் அடிப்படையில் தேசிய அளவில் ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் என்.ஐ.ஆர்.எப் தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டின் தேசிய தரவரிசை பட்டியலின் 23ம் இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளது. 

தென்னிந்திய அளவில் அரசு பல் மருத்துவ கல்லுாரிகளில் இக்கல்லூரி மட்டுமே தேர்வாகியுள்ளது. குறிப்பிடத்தக்கது. இக்கல்லூரி கடந்த 2024ம் ஆண்டு 35-வது இடத்திலிருந்து 2025ம் ஆண்டு 23ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனையை பாராட்டி புதுச்சேரி மாநில இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சார்பில், மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கென்னடி பாபுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில இந்திய பல் மருத்துவ சங்க தலைவர் செந்தில், சங்க செயலாளர் ராம்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Advertisement