மெட்டபாலோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் வேளாண் பல்கலை செயல்முறை பயிற்சி

கோவை: கோவை வேளாண் பல்கலையின் உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையத்தில் (காக்ஸ்பிட்), ‘மெட்டபாலோமிக்ஸ்’ மற்றும் ‘புரோட்டியோமிக்ஸ்’  தொழில்நுட்பங்கள் குறித்த 5 நாள் செயல்முறை பயிற்சி முகாம் கடந்த 18ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது.

இந்த இரு தொழில்நுட்பங்களும் வேளாண்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆய்வுகள், புதிய மருந்துகளைக் கண்டுபிடித்தல், சிஸ்டம்ஸ் பயாலஜி ஆகிய துறைகளின் நவீன ஆய்வுகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இப்பயிற்சியில் இளநிலை, முதுநிலை மாணவர்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை விஞ்ஞானிகள், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தாவர உயிரி தொழில்நுட்பத் துறை தலைவர் கோகிலாதேவி, டீன் பாலசுப்பிரமணின், காக்ஸ்பிட் இயக்குநர் செந்தில், இணைப் பேராசிரியர் வெள்ளைக்குமார் உள்ளிட்டோர் பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Advertisement