பேச்சுப் போட்டியில் மாணவர்கள் சாதனை
மேலுார்: மேலுாரில் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு பாரதிதாசன் அகாடமி, இளைஞர்களின் வெற்றி பயணம் அமைப்பு சார்பில் மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது. அகாடமி தாளாளர் ஜீவா வரவேற்றார். செயலாளர் சூர்யா சிறப்புரையாற்றினார். மாணவர்கள் துர்கா, கார்னிகா, திரேந்திரன் முதல் 3 பரிசுகளை வென்றனர். சிறப்பு பரிசு சந்தோஷிகா, சரவணா பவதாரணி, ராஜாராம், கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. அகாடமி செயலாளர் சூர்யா எழுதிய அரசியல் அழுக்குகள் நுால் வெளியிடப்பட்டது. ஆற்றல் அறக்கட்டளை நிர்வாகி ரபீக்ராஜா, தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கர்ணன், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி சந்தோஷ் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement