கள்ளக்குறிச்சியில் த.வெ.க., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் த.வெ.க., நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு த.வெ.க., நகர செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் திலீப்குமார், சின்னசேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர இணை செயலாளர் அருண், பொருளாளர் அருண்குமார், துணை செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தனர்.

த.வெ.க., தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்காகவும், 200 யூனிட் இலவச மின்சாரம் உட்பட 3 திட்டங்களை கையெழுத்திட்டு துவக்கி வைத்ததை, கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில், த.வெ.க., மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் சுரேந்திரன், நகர செயற்குழு உறுப்பினர்கள் சரூப்ராஜ், தேவராஜ், ஆனந்தராஜ், நடராஜ், வெங்கடேசன், விஜயபிரியன், கார்த்திக், வினோத் மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement