கேரள முதல்வராக வி.டி.சதீஷன் பதவியேற்பு; 20 அமைச்சர்களும் பொறுப்பேற்பு
திருவனந்தபுரம்: கேரள முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் வி.டி.சதீஷன், இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கேரள சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், 102ல் வெற்றி பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதல்வராக பொறுப்பேற்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. காங்., மூத்த தலைவர்களான வேணுகோபால், சதீஷன் மற்றும் ரமேஷ் சென்னிதலா இடையே கடும் போட்டி நிலவியதால், முடி வு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. காங்கிரஸ் மேலிடம் நடத்திய தீவிர ஆலோசனைகளுக்கு பின், சதீஷனின் பெயர் இறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, காங்., மூத்தத் தலைவர் சதீஷன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு இன்று பதவியேற்றுக் கொண்டது. திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், வி.டி.சதீஷனுக்கு, கேரள கவர்னர் அர்லேக்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன், காங்கிரசைச் சேர்ந்த 12 பேர், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எட்டு பேர் என, 20 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
முதல்வர்கள் பங்கேற்பு
பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் சித்தராமையா, ரேவந்த், சுக்விந்தர் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சியினரும்
விழாவில், பதவி விலகிய முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பினாய் விஸ்வம், பாஜ மாநில தலைவர் ராஜிவ் சந்திரசேகர் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
@block_B@
பிரதமர் வாழ்த்து
'கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ள சதீசனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களின் தேவைகளை நிறைவேற்ற, புதிதாக அமைந்துள்ள கேரள அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். block_B
வாசகர் கருத்து (13)
Rajah - Colombo,இந்தியா
18 மே,2026 - 16:20 Report Abuse
தமிழில் தவறு இருக்கிறது. தவறுக்கு வருந்துகின்றேன். ஆனால் என் தவறுக்கும் பாஜவுக்கும் என்ன சம்பந்தம்? எதெற்கெடுத்தாலும் பாஜக. தெய்வத்தின் மீது சத்தியம் செய்தது நல்லது என்று சொல்வதும் தவறா? நான் பாஜக தொண்டனாக இருப்பதில் பெருமைப்படுகின்றேன். அந்த பெருமையைக் கொடுத்த கடவுளுக்கும் நன்றி. வாழ்க பாரதம். 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
18 மே,2026 - 16:19 Report Abuse
மாற்றம் தந்தவர் போகவில்லயா 0
0
Reply
Rajah - Colombo,இந்தியா
18 மே,2026 - 16:05 Report Abuse
ஒருவன் நடக்கும்போது தவறி விழுந்தாலும் பாஜகவை குறை சொல்வதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. தமிழை சரியாக எழுதவில்லை என்று குறிப்பிடுவதில் தவறில்லை. அதற்கும் பாஜகாதான் காரணம் என்று சொல்வது அக்கட்சியின் மீது உள்ள வெறுப்பைக் காட்டுகின்றது. 0
0
Reply
suren - Colombo,இந்தியா
18 மே,2026 - 14:34 Report Abuse
"சத்தியம் செய்திருக்கிரீர்கள்"....இது தவறான தமிழ்... செய்திருக்கிறீர்கள் என்பதே சரி... மதவெறியை தூண்டும் நீங்கள் முதலில் தாய் மொழி தமிழை ஒழுங்காக எழுதப்பழகவும்...எழுதப்படிக்க தெரியாது... கருத்து சொல்ல வந்துவிட்டார்... பிஜேபி தானே..அது தான் பிரச்சினை.. இப்போது புரிகிறதா..வாழ்க காங்கிரஸ். 0
0
Madhavan - Fremont, CA, USA,இந்தியா
18 மே,2026 - 21:41Report Abuse
தமிழில் தட்டச்சு செய்வதில் சில பிரச்னைகளும் உள்ளன. நாம் சரியாக டைப் செய்தாலும் அது சில சமயம் தவறாக நம்மை வழி நடத்துகிறது. இது மென்பொருள் சம்பந்தப்பட்ட விஷயம். நாம் கவனிக்காமல் பதிவு செய்த பிறகு அதனை நாம் திருத்துவதற்கு வாய்ப்பில்லை. Facebook போன்ற வலைத் தளங்களில் எடிட் செய்யும் வசதி உள்ளது. நாளிதழின் எடிட்டர் திருத்தலாம். ஆனால் அவர்கள் செய்வதில்லை. ஒவ்வாத கருத்துக்களை நீக்குவதைப் போல இலக்கணப் பிழைகளையும் திருத்தலாம்.
இது என் யோசனைதான். 0
0
Reply
Field Marshal - Redmond,இந்தியா
18 மே,2026 - 14:26 Report Abuse
Vadassery Damodaran சதீசன் என்பதற்கு பதில் வெறும் Damodaran சதீசன் என்று குறிப்பிட்டிருக்கலாம் 0
0
Reply
Field Marshal - Redmond,இந்தியா
18 மே,2026 - 14:24 Report Abuse
புத்தகமும் கையுமா மோனாலிசா புன்னகையுடன் நின்றிருந்த அந்த அதிகாரியின் வசீகரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது .. 0
0
Reply
Rajah - Colombo,இந்தியா
18 மே,2026 - 13:37 Report Abuse
தெய்வத்தின் மீது சத்தியம் செய்திருக்கின்ரீர்கள். நல்லது. 0
0
Reply
Madhavan - Fremont, CA, USA,இந்தியா
18 மே,2026 - 13:36 Report Abuse
தற்போது தமிழகம், கேரளம் இரண்டிற்குமாக ஒரே கவர்னர்தான் உள்ளார். தமிழக முதல்வர் பதவியேற்பில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை கேரளத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்றால், மேதகு கவர்னர் அவர்கள் விமரிசிக்கப்படுவார். 0
0
Reply
mindum vasantham - madurai,இந்தியா
18 மே,2026 - 13:03 Report Abuse
கம்யூனிஸ்ட்கள் தற்போதைய காங்கிரஸ் விட பெட்டெர் 0
0
Reply
Madhavan - Fremont, CA, USA,இந்தியா
18 மே,2026 - 10:41 Report Abuse
பதவி ஏற்புக்கு முன் வந்தே மாதரம் , ஜன கண மன பாடல்கள் ஒலிக்கப்பட்டதா என்பது குறித்து என் செய்திக் குறிப்பில் இல்லை? 0
0
Muralidharan raghavan - coimbatore,இந்தியா
18 மே,2026 - 11:07Report Abuse
வந்தே மாதரம் பாடுவதற்கு முஸ்லீம் லீக் அனுமதிக்காது. காங்கிரஸ் கட்சியில் யார் முதல்வராக வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதே முஸ்லீம் லீக்தான். சதீசன் இந்த கட்சியின் ஆதரவில்தான் முதல்வர் ஆகியுள்ளார் 0
0
Ramesh Rayen - Abu Dhabi,இந்தியா
18 மே,2026 - 11:43Report Abuse
காங்கிரசுக்கு அது பிரச்சனை இல்லை 0
0
Reply
மேலும்
-
பந்தலுார் பகுதிக்கு அடிப்படை வசதிகள் அவசர அவசியம் வியாபாரிகள் சங்கத்தினர் கமிஷனரிடம் மனு
-
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ‘சென்டம்’ எண்ணிக்கை உயர்ந்தது
-
மரவள்ளி தோட்டங்களில் பூச்சிதாக்கு தோட்டக்கலை விஞ்ஞானிகள் ஆய்வு
-
கணவர் மாயம் மனைவி புகார்
-
காரைக்கால் -பேரளம் ரயில்பாதையில் பயணிகள் ரயில் சேவை துவங்கியது
-
மருந்து கடைகள் மூடல்
Advertisement
Advertisement