இருந்த அடையாளமே இருக்காது; ஈரான் வரைபடத்தை குறிவைத்து எச்சரிக்கும் டிரம்ப்
வாஷிங்டன்: போர் நிறுத்தம் தொடர்பான விவகாரத்தில் காலம் தாழ்த்திக் கொண்டே சென்றால், ஈரான் இருந்த அடையாளமே இல்லாமல் செய்து விடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. இருதரப்பும் பரஸ்பர தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளனர். இந்தப் போரினால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை நிலவி வருவதால், போர் நிறுத்தம் செய்ய உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், ஈரான் தன் கைவசம் உள்ள 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும், போர் இழப்பீடு கோரும் கோரிக்கையை ஈரான் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு நிபந்தனைகளால் இருதரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது.
இந்த நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்காவிட்டால், இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் செய்து விடுவோம் என்று , ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப்பின் 'ட்ரூத் சோஷியல்' என்ற எக்ஸ் தள கணக்குப் பக்கத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், "ஈரானைப் பொறுத்தவரை நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைந்து செயல்படுவது மிகவும் நல்லது. இல்லையெனில், அவர்களைப் பற்றிய அடையாளமே மிஞ்சாது. நேரம் மிகவும் முக்கியமானது," என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், ஈரானை சுற்றி வளைத்தது போன்று, உலக வரைபடத்தில் அந்நாட்டை அம்புக்குறியிட்டு இலக்காக நிர்ணயித்தது போன்ற போட்டோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அரபு நாடுகள் தங்களின் ஆதரவு நாடுகள் என்பதைப் போல், அமெரிக்கக் கொடி வர்ணத்தில் அந்தப் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (10)
Rajasekar Jayaraman - ,
19 மே,2026 - 07:35 Report Abuse
வினைக்கு எதிர் வினை உண்டு அமெரிக்காவை தண்டிக்க ஒருவனை அனுப்புவான் கடவுள் அது மிகப் பயங்கரமாக இருக்கும். 0
0
Reply
Sundaran - ,இந்தியா
18 மே,2026 - 13:16 Report Abuse
சும்மா உதார் விட்டு கொண்டிருக்காமல் அடித்து நொறுக்கி தரை மட்டம் ஆக்குங்கள் உலகுக்கு விடிவு காலம் பிறக்கட்டும் 0
0
Reply
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
18 மே,2026 - 10:41 Report Abuse
ஐநாவால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியுமா ? 0
0
Reply
Sivaraman - chennai,இந்தியா
18 மே,2026 - 09:38 Report Abuse
ஹிட்லர் முஸ்ஸோலினி செயல்பாடுகள் அறியாதவர் உலகில் ஏராளம். இந்த புண்ணியவான் மூலம் அறிகிறோம். 0
0
visu - tamilnadu,இந்தியா
18 மே,2026 - 14:07Report Abuse
உண்மையில் ஈரான் தான் பிரச்சனை .அவர்களை கையில் அணுஆயுதம் இருப்பது உலகுக்கு நல்லது அல்ல . வெளிப்படையா தீவிரவாத குழுக்களை வளர்க்கும் நாடு எப்படி கட்டுப்பாடுடன் இருக்கும் 0
0
Reply
Minimole P C - chennai,இந்தியா
18 மே,2026 - 09:18 Report Abuse
Iran, which is the reason for world terror activities. It must be cut to its size. 0
0
Reply
Dv Nanru - mumbai,இந்தியா
18 மே,2026 - 09:06 Report Abuse
அட போயா map வரைபடம் உன் காமெடிக்கு அளவே இல்லையா ..?? உன் ஆட்சியையும் உன் உயிரும் நாளுக்கு நாள் அமெரிக்காவில் கேள்வி குறியாக உள்ளது உன் நாட்டுக்காரன் உன்னை மூன்றுமுறை சுட முயற்சித்தான் அத முதலில் சரி செய்யவேண்டும் அப்பறம் இந்த பீட்டர் உடுறதை நிறுத்திக்கொள்ளவும் ... 0
0
Reply
Dum - ,இந்தியா
18 மே,2026 - 09:00 Report Abuse
ஆடிய ஆட்டமென்ன ? எல்லாம் அறியாமை அகந்தை அழியும் என்பதுதான் சரித்திரம் 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
18 மே,2026 - 08:34 Report Abuse
இன்னும் சில வருடங்களின் உன் பதவி போகும்.நீயும் சில வருடங்களில் உலகத்தை விட்டே செல்வாய்.ரொம்பா ஆடுகிறாய். 0
0
Reply
chandran - madurai,இந்தியா
18 மே,2026 - 07:56 Report Abuse
Trump can rename Earth as "USA" and enjoy. 0
0
Reply
மேலும்
-
ஊராட்சி செயலர்களுக்கு பி.டி.ஓ., மூலம் சம்பளம் வழங்க வலியுறுத்தல்
-
தேசியவாத சிட்டிசன் கட்சியுடன் இணையும் திரிணமுல் அதிருப்தி எம்பிக்கள்
-
லெபனான் மீது குண்டுவீச்சு: இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டிப்பு
-
நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடம்
-
மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களை கண்காணிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை
-
சுவரொட்டிகளை அகற்ற நகராட்சி தயக்கம்
Advertisement
Advertisement