கோவை கோர்ட்களில் நீதிபதிகள் மாற்றம்
கோவை: கோவையில் பணியாற்றிய மாவட்ட நீதிபதிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி பாபுலால், கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக தஞ்சாவூர் இ.சி., கோர்ட் நீதிபதி சுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி மகேஸ்வரி பானுரேகா மாற்றப்பட்டு, கோவை நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் நீதிபதியாக, சிவகங்கை மகளிர் கோர்ட் நீதிபதி கோகுல் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சுந்தரராஜ், கோவை மகளிர் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement