மயிலாடுதுறையில் தடகள போட்டிகள்; பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாநில அளவிலான மகளிர் காண மூத்தோர் தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் 30 வயது முதல் 75 வயது வரையிலான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மயிலாடுதுறையில் மகளிர் காண முதலாவது மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் நடைபெற்றது. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில், 30 வயது முதல் 75 வயது வரை உள்ள பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஈட்டி எறிதல் குண்டு எறிதல், 3000 மீட்டர் நடைபோட்டி, 5000 மீட்டர் ஓட்டப்பந்தயம் என பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. மாநில முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் மூதாட்டிகள் ஆர்வமுடன் பங்கேற்றது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சான்றிதழும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

Advertisement