மூச்சு பயிற்சியின் ரகசியம்!
"உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அதிலிருந்து விடுபட நான் கற்றுக் கொண்ட யோகா, விபத்தில் இருந்து என்னை முழுமையாக மீட்டதோடு சர்வதேச யோகா பயிற்சியாளராக மாற்றியது." என்கிறார் திருச்சி தென்னுாரைச் சேர்ந்த தேவி சிந்தாமணி.
அமெரிக்காவில் பதிவு பெற்ற சக்தி யோகாலயாவின் 'குளோபல் ஹெட்' ஆக இருக்கும் தேவி சிந்தாமணி, யோகா, மூச்சுபயிற்சி பற்றி விவரித்தார்.
அவர் கூறியது: 30 ஆண்டு களாக கற்றுக் கொண்ட யோகா பயிற்சி, விபத்தில் அடிபட்ட போது எனக்கு கைகொடுத்தது. பத்தாண்டுகளுக்கு முன் மரணம் வரை சென்ற நிலையில் மூச்சு, சுவாசப்பயிற்சியை கையாண்டு, மருத்துவ சிகிச்சைக்கு முன்பு வரை, என் உயிரை கையில் பிடித்துக் கொண்டேன். சிகிச்சைக்கு பின் டாக்டர்கள் கேட்டபோது பிராணயாமம் குறித்து விளக்கினேன். முழுமை யாக குணமாக 9 மாதங்கள் ஆன நேரத்தில் பிராணயாமம் எனக்குள் ஏற்படுத்திய மாற்றங்களை உணர ஆரம்பித்தேன். பின் யோகா ஆசிரியருக்கான சிறப்பு பயிற்சி பெற்று பயிற்சியாளரானேன். சக்தி யோகாலயா இயக்குநர் கவிதா இளையராஜா மூலம் ஜூனில் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற உள்ள குழந்தைகளுக் கான சீசன் 6 யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்.
மனம், உடல், ஆன்மாவை ஒரே நேர்கோட்டில் ஒருநிலைப் படுத்துவது யோகா. நம்மைப் பொறுத்தவரை மனம் ஒன்று சொன்னால், புத்தி வேறொன்று சொல்லும். ஆனால் மனம் சொல் வதை தான் கேட்போம். புத்தியை பின்பற்ற மாட்டோம். மனம் சொல்வதை கேட்டால் தனக்குப் பிடித்ததை மட்டும் செய்து பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. யோகா பயிற்சி பெறுபவர்கள் மனம், புத்தியை ஒருநிலைப்படுத்தி அமைதியாக வைத்துக் கொள்ள முடியும். சந்தோஷம் தாவிக் கொண்டே இருக்கும். அமைதி என்பது உடல் ஒடுங்கும் போது தான் தெரியும். சந்தோஷம் என்பதை விட அமைதியாக வாழ்வதே முக்கியம்.
எது எத்தனை சதவீதம்
யோகா என்பதில் உடலை வளைப்பது (உடல் செயல்பாடு) 80 சதவீதம், பிராணயாமம் 20 சத வீதம் என நினைக்கலாம். நாங்கள் உடலியக்க செயல்பாட்டுக்கு 20 சதவீதம், மூச்சுப்பயிற்சிக்கு 80
சதவீதம் முக்கியத்துவம் தருகி றோம். மூச்சு பயிற்சியை சரிசெய் தால் மனம், உடல், ஆன்மாவை சரிசெய்யமுடியும். அதை எப்படி சரிசெய்ய வேண்டும் என கற்றுத் தருகிறோம்.
பெரும்பாலானோர் தவறாக சுவாசிக்கின்றனர். அதாவது 'ரிவர்ஸ்' முறையில் சுவாசிப்பதால் தான் பிரச்னைகள் வரு கின்றன. பிறந்த குழந்தை யின் சுவாசம் சரியான முறையில் இருக்கும். வெளிச் சூழ்நிலைகளை கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் போது மூச்சிழுப்பது, மூச்சு விடுவதில் கவனம் திசைமாறி 'ரிவர்ஸ்' முறைக்கு மாறுகிறது. இதை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒருமணி நேரம் யோகா மூலம் சரியான முறையில் மூச்சு விடுவதையும் மூச்சிழுப்பதையும் கற்றுக் கொள்ளலாம்.
பெரும்பாலானோர் அரைகுறையாக மூச்சை உள்ளிழுந்து வெளியேற்றுகின்றனர். வயிறு வரை மூச்சை உள்ளிழுத்து நுரையீரல் வரை காற்றை நிரப்பி வயிற்றை உள்ளிழுத்து சுவாசத்தை வெளியேற்ற வேண்டும். இதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு பரவுவதை உணரலாம். இது மூச்சுப்பயிற்சியின் ரகசியம்.
குரு முக்கியம்
இதை தானாக செய்யலாம் என்றாலும் எவ்வளவு நேரம் மூச்சை உள்ளிழுக்கிறோம், அதைப் பிடித்து வைத்து மீண்டும் வெளியேற்றுகிறோம் என்பதை எண்ணிக்கை கணக்கில் கவனம் செலுத்த முடியாது. புத்தகம் பார்த்தோ, சமூகவலைதளங்களின் மூலமோ முழுமையாக கற்றுக் கொள்ளமுடியாது.
இதைத் தான் திருமூலரும் சொல்கிறார். முறையாக பயிற்சி பெற்ற ஆசி பயிற்சி பெறவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட மூச்சு பயிற்சி செய்யலாம். இதனால் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும் உடல் இளமையாகவும் இருக்கும்.
3 மாதத்திற்கு பின் வரும் உடல் உபாதையை கண்டறிந்து யோகா மூலம் குணப்படுத்த முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பி.பி.,. சுகர், ஆர்த்ரைட்டீஸ், வெரிகோ சிஸ் நோய்களையும் அறிவியல் பூர்வமாக சரிசெய்ய முடியும்.
யார் யார் பயிற்சி பெறலாம்
5 வயது முதல் நுாறு வயது வரையுள்ளவர்கள் கூட மூச்சு பயிற்சி, யோகா பயிற்சி பெறலாம். படுக்கை நோயாளி களுக்கு கூட பிராணயாமம் பயிற்சி அளித்து உடல்நலத்தை முன்னேற்றலாம். கர்ப்பிணிகளும் பயிற்சி பெறலாம். தரையில் உட்கார முடியாத முதியவர்கள் நாற்காலியில் அமர்ந்தபடி பயிற்சி பெறலாம். அதனால் வாழ்நாள் முழுவதும் யோகா பயிற்சி செய்யலாம்.
சுயவிருப்பம் இருப்பது அவசியம். யோகா என்பதே பயத்தை போக்குவது தான். தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாவிட்டால் 20 நிமிடங்களுக்காவது யோகா, மூச்சு பயிற்சி செய்யலாம் என்றார்.
மேலும்
-
நண்பருக்கு கத்திக்கத்து போலீஸ் விசாரணை
-
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பஸ் நிலையத்தில் ஆய்வு
-
ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி கஞ்சம் ரெட்டி சமூகத்தினர் மனு
-
வீடு வீடாக குப்பை சேகரிப்பு விபரம் கணக்கெடுப்பு
-
சோலையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு
-
திண்டிவனத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள்... அடாவடி!புதிய பஸ் நிலையத்திற்கு வராமல் புறக்கணிப்பு