மழைக்காக சிறப்பு வழிபாடு
போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்து ராஜா முத்தையா நகரில், முத்து விநாயகர் கோவில் உள்ளது. இங்கு கோவில் நிர்வாகம் சார்பில் மழை வேண்டி, முத்து விநாயகருக்கு, 108 குடம் தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. வில்வ லிங்கேஸ்வரருக்கு, 108 இளநீர் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டது. கோவில் அர்ச்சகர் செந்தில் குருக்கள் அபிஷேகம், சிறப்பு பூஜையை நடத்தினார். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement